A.R. Rahman feat. Shahul Hameed - Rasathi (From "Thiruda Thiruda") Lyrics

Lyrics Rasathi (From "Thiruda Thiruda") - A.R. Rahman feat. Shahul Hameed



ராசாத்தி என் உசுரு என்னுதில்ல
பூச்சூடி வாக்கப்பட்டு போன புள்ள
நீபோனா என் உசுரு மண்ணுக்குள்ள
ராவோடு சேதி வரும் வாடி புள்ள
ராசாத்தி என் உசுரு என்னுதில்ல
கார வீட்டுத் திண்ணையில
கறிக்கு மஞ்சள் அறைக்கையில
மஞ்சள அறைக்கும் முன்ன மனச அரச்சவளே
கரிசாக் காட்டு ஓடையில கண்டாங்கி தொவைக்க இல
துணிய நனைய விட்டு மனச புழிஞ்சவளெ
நெல்லுக் களத்து மேட்டுல இழுத்து முடிஞ்சி கிட்டு
போனவ போனவ தான்
புதுக் கல்யாணச் சேலையில கண்ணீராத் தொடச்சி கிட்டுப்
போனவ போனாவதான்
நான் தந்த மல்லிகைய நட்டாத்தில் போட்டு விட்டு
அரளிப் பூச்சூடி அழுதபடி போறவளே
கடலக் காட்டுக்குள்ள கை அடிச்சி சொன்ன புள்ள
காத்துல எழுதனும் பொம்பளங்க சொன்ன சொல்ல
கடலக் காட்டுக்குள்ள கை அடிச்சி சொன்ன புள்ள
காத்துல எழுதனும் பொம்பளங்க சொன்ன சொல்ல
ராசாத்தி என் உசுரு என்னுதில்ல
பூச்சூடி வாக்கப்பட்டு போன புள்ள
நீபோனா என் உசுரு மண்ணுக்குள்ள
ராவோடு சேதி வரும் வாடி புள்ள
ராசாத்தி என் உசுரு என்னுதில்ல
தொட்டு தொட்டு சுட்டு வெச்ச
சுட்டு வெரல் காயலையே
மறிக் கொழுந்து வெச்ச கையில்
வாசம் இன்னும் போகலையே
மருதையில வாங்கித் தந்த வளவி ஓடையலையே
மல்லு வேட்டி மத்தியில மஞ்சக்கர மாறலையே
அந்தக் கழுத்து தேமலையும் காதோர மச்சத்தையும்
பார்ப்பதெப்போ
அந்தக் கொலுசு மணி சிரிப்பும்
கொமரி இலஞ் சிரிப்பும் கேட்ப தெப்போ
கருவேலங் காட்டுக்குள்ள கரிச்சான் குருவி ஒண்னு
சுதி மாறிக் கத்துதம்மா தொணையத் தான் காணோமின்னு
கடலக் காட்டுக்குள்ள கை அடிச்சி சொன்ன புள்ள
காத்துல எழுதனும் பொம்பளங்க சொன்ன சொல்ல
கடலக் காட்டுக்குள்ள கை அடிச்சி சொன்ன புள்ள
காத்துல எழுதனும் பொம்பளங்க சொன்ன சொல்ல
ராசாத்தி என் உசுரு என்னு தில்ல
பூச்சூடி வாக்கப் பட்டு போன புள்ள
நீபோனா என் உசுரு மண்ணுக்குள்ள
ராவோடு சேதி வரும் வாடி புள்ள
ராசாத்தி என் உசுரு என்னு தில்ல



Writer(s): KAVIPERARAS VAIRAMUTHU, A R RAHMAN, ALLAHRAKKA RAHMAN, N/A VAIRAMUTHU


A.R. Rahman feat. Shahul Hameed - Big FM Rahman Ungaludan
Album Big FM Rahman Ungaludan
date of release
24-10-2014



Attention! Feel free to leave feedback.