Anton Goosen - SMS Lyrics

Lyrics SMS - Anton Goosen




ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்
கண்கள் இரண்டில் காதல் வந்தால்
கண்ணீர் மட்டும் துணை ஆகுமே
ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்
திமிருக்கு மறு பெயர் நீதானே
தினம் தினம் உன்னால் இறந்தேனே
மறந்திட மட்டும் மறந்தேனே
தீ என புரிந்தும் அடி நானே
திரும்பவும் உன்னை தொட வந்தேனே
தெரிந்தே சுகமாய் எரிந்தேனே
கடும் விழதினை எடுத்து குடித்தாலும்
அடி கொஞ்சம் நேரம் கழித்தே உயிர் போகும்
இந்த காதலிலே உடனே உயிர் போகும்
காதல் என்றால் பெண்ணே சித்ரவதை தான்
ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்
உன் முகம் பார்த்தே நான் எழுவேன்
உன் குரல் கேட்டால் நான் அறிவேன்
உன் நிழல் உடனே நான் வருவேன்
புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன்
புறக்கணித்தால் நான் என்னாவேன்
பெண்ணே எங்கே நான் போவேன்
உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை
சொல்லி விட்டால் தொடங்கும் என் வாழ்கை
மௌனத்தில் இருக்கும் எண்ண வரிகள்
காதல் என்றால் பெண்ணே சாதல் என்று சொல்ல
ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்
கண்கள் இரண்டில் காதல் வந்தால்
கண்ணீர் மட்டும் துணை ஆகுமே
ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்



Writer(s): Anton Goosen


Attention! Feel free to leave feedback.