Arun Mozhi feat. Harini - Poonguil Pattu Putichirukka Lyrics

Lyrics Poonguil Pattu Putichirukka - Arun Mozhi , Harini




பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா?
பூங்காற்றே பிடிச்சிருக்கா?
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா?
பனிக்காற்றே பிடிச்சிருக்கா?
(பூங்குயில்.)
சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கா?
சுத்திவரும் மின்மினிகள் பிடிச்சிருக்கா?
அடி கிளியே நீ சொல்லு
வெள்ளி நிலவே நீ சொல்லு
(பூங்குயில்.)
ஜன்னலுக்குள்ளே வந்து கண்னடிக்கிற
அந்த வெண்ணிலவை பிடிச்சிருக்கா?
கண்கள் திறந்து தினம் காத்துக்கிடந்தேன்
என்னை கண்டுக்கொள்ள மனசிருக்கா?
இளமனசுக்குள் கனவுகளை இறக்கி வச்சது நெனப்பிருக்கா?
மேகம் கூட்டம் மறைச்சிருக்கே மீண்டும் சேர வழியிருக்கா?
அடி கிளியே நீ சொல்லு
வெள்ளி நிலவே நீ சொல்லு
(பூங்குயில்.)
ஆலமரத்தில் உன் பேரை செதுக்கி
நான் ரசிச்சது பிடிச்சிருக்கா?
கொட்டும் மழையில் அந்த ஒற்றை குடையில்
நாம நனைஞ்சது நெனப்பிருக்கா?
பிரம்பிருக்கிற மனசுக்குள்ளே திருடிச்சென்றது பிடிச்சிருக்கா?
மாசம் போகும் பிடிச்சிருக்கா?
வாழ்ந்து பார்க்க வழியிருக்கா?
அடி கிளியே நீ சொல்லு
வெள்ளி நிலவே நீ சொல்லு
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு
பூங்காற்றே பிடிச்சிருக்கு
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு
பனிக்காற்றே பிடிச்சிருக்கு
சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கு
சுத்திவரும் மின்மினிகள் பிடிச்சிருக்கு
அடி கிளியே நீ சொல்லு
வெள்ளி நிலவே நீ சொல்லு
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு
பூங்காற்றே பிடிச்சிருக்கு
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு
பனிக்காற்றே பிடிச்சிருக்கு



Writer(s): s. a. rajkumar



Attention! Feel free to leave feedback.