Benny Dayal & Shweta Pandit - Oru Kan Jaadai Lyrics

Lyrics Oru Kan Jaadai - Shweta Pandit , Benny Dayal



ஒரு கண் ஜாடை செய்தாலே
மனம் பஞ்சாகும் தன்னாலே
இடைவிடாத அன்பாலே
எனை வெண்மேகம் செய்தாளே
தரையில் போகும் மேகம்
இவளா மயங்கி பார்த்தேனே
உயிரும் கூச்சல் போடும்
அவள் செய்யும் மாயம் ஓயாதே
ஒரு கண் ஜாடை செய்தாலே
மனம் பஞ்சாகும் தன்னாலே
இடைவிடாத அன்பாலே
எனை வெண்மேகம் செய்தாளே
வானம் என்றால் தலைக்கு மேலே
இருக்கும் என்று நினைத்திருந்தேன்
எந்தன் வானம் எதிரில் நின்று
புன்னகைத்தாள் மெய்மறந்தேன்
ஆசை எல்லாம் பூட்டி வைத்தேனே
சாவி உந்தன் விழிகளிலே
அனுமதிக்கும் பார்வை வந்தாலே
அள்ளிக்கொள்வேன் நிமிடத்திலே
எந்நாளும் வேண்டுமே உன்னோடு
கைகள் சேர்த்து போகும் நெடு பயணம்
காதல் ஒன்றுதான் இறுதிவரை
வாழும் வாழ்வை அர்த்தமாக்கும்
ஒரு கண் ஜாடை செய்தாலே
மனம் பஞ்சாகும் தன்னாலே
இடைவிடாத அன்பாலே
எனை வெண்மேகம் செய்தாளே
தொடரும் போட்ட கதையை போல
இந்த மாலை முடிகிறதே
உந்தன் கண்கள் பார்க்கத்தானே
எனது காலை விடிகிறதே
வாரம் ஏழு நாளும் உன்னாலே
வானவில்லாய் தெரிகிறதே
உன்னைக்காணா நாட்கள் எல்லாமே
கருப்பு வெள்ளை ஆகிறதே
மின்சாரத் தோட்டமே உன்மேனி பூக்கும்
பூக்கள் ஒரு அதிர்ச்சியடி
காதல் செய்யலாம் முழுதும்
நீ பார்த்த மூர்ச்சை ஆகும்படி
ஒரு கண் ஜாடை செய்தாலே
மனம் பஞ்சாகும் தன்னாலே
இடைவிடாத அன்பாலே
எனை வெண்மேகம் செய்தாளே
தரையில் போகும் மேகம் இவளா
மயங்கி பார்த்தேனே
உயிரும் கூச்சல் போடும்
அவள் செய்யும் மாயம் ஓயாதே



Writer(s): Viveka


Benny Dayal & Shweta Pandit - Anjaan (Original Motion Picture Soundtrack)
Album Anjaan (Original Motion Picture Soundtrack)
date of release
23-07-2014



Attention! Feel free to leave feedback.