Haricharan - Sariya Idhu Thavara Lyrics

Lyrics Sariya Idhu Thavara - Haricharan



சரியா இது தவறா
சரியா இது தவறா
சரியா இது தவறா
இந்த உணர்வினை விளக்கிட மனதுக்கு தெரியல
சரியா?
காதல் தவறா?
வரமா இது வலையா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலையா
கடலுக்கு மேல் ஒரு
மழை துளி வந்து விழுந்ததே
உப்பென மாறுமா
இல்லை முத்தென மாறுமா
சரியா இது தவறா
இந்த உணர்வினை விளக்கிட மனதுக்கு தெரியல
சரியா?
காதல் தவறா?
வரமா இது வலையா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலையா
ஆணும் பெண்ணும் பழகிடும் போது
காதல் மிருகம் மெல்ல மறைந்திருக்கும்
ஆசை என்னும் வலையினை விரித்து
அல்லும் பகலும் அது காத்து கிடக்கும்
நண்பர்கள் என்று சொன்னால் சிரிக்குமே
நாளைக்கு பார் என்று உரைகுமே
நெஞ்சுக்குள் துண்டு வைத்தே இழுக்குமே
நம் நிழல் அதன் வழி நடக்கும்
தடுப்பது போல நடித்திடும் போதும்
தத்தி தாவி பெண்களோடும்
அடுத்தது என்ன
அடுத்தது என்ன
அணையை தாண்டி உள்ளம் கேட்கும்
இது சரியா
சரியா இது தவறா
இந்த உணர்வினை விளக்கிட மனதுக்கு தெரியல
சரியா?
காதல் தவறா?
வரமா இது வலையா
இந்த உறவினை புரிந்த்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலையா
ஆண்கள் இதயம் படைத்திட்ட கடவுள்
மெழுகினிலே அதை படைத்தது விட்டான்
பெண்கள் நெருங்கி பேசிடும் பொழுது
மெது மெதுவாய் அதை உருக வைத்தான்
உள்ளத்தை கட்டி போட தெரிந்தவன்
யாருமே உலகத்தில் இல்லையே
வெள்ளத்தின் அளவுகள் தாண்டினால்
வண்டுகள் என்ன செய்யும் முல்லையே
தொடு தொடு என்று தூரத்தில் நின்று
தூதுகள் சொல்லுது விழிகள் ரெண்டு
தொட தொட வந்தால் தொடு வானம் போல்
தள்ளி செல்லுது மேகம் ஒன்று
இது சரியா?
சரியா இது தவறா
இந்த உணர்வினை விளக்கிட மனதுக்கு தெரியல
சரியா?
காதல் தவறா?
வரமா இது வலையா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலையா
கடலுக்கு மேல் ஒரு
மழை துளி வந்து விழுந்ததே
உப்பென மாறுமா
இல்லை முத்தென மாறுமா
சரியா இது தவறா
இந்த உணர்வினை விளக்கிட மனதுக்கு தெரியல
சரியா காதல் தவறா
வரமா இது வலையா
இந்த உறவினை புரிந்திட வயதுக்கு தெரியல
வரமா காதல் வலையா



Writer(s): Na Muthukumar, Joshua Sridhar


Haricharan - Kalloori (Original Motion Picture Soundtrack) - EP




Attention! Feel free to leave feedback.