Ilaiyaraaja feat. Mano - Oh Alagu Nilavu Lyrics

Lyrics Oh Alagu Nilavu - Ilaiyaraaja



அழகு நிலவு சிரிக்க மறந்ததே
மலரும் சிரிப்பில் உறவை மறந்ததே
என் கண்மணி பனிதுளி கண் மீதிலா
விண் மீதிலே வலம் வரும் நீ வெண்ணிலா
அழகு நிலவு சிரிக்க மறந்ததே
இமைகள் மூடும் கண்களாய் நான் வாழ்கிறேன்
இதயம் கூட பாரமாய் நான் மூழ்கினேன்
இலைகள் மூடும் கனிகள்தான் என் ஆசையே
இலக்கணம் தான் இணைந்திடா குயிலோசையே
நீர் மேல் அழகிய கோலம்
போட்டேன் தினம் தினம் நானும்
நினைத்தால் இனிமைதான் நடந்தால் அருமைதான்
நினைவே நினைவிலே விழியிலே எழுதடி
அழகு நிலவு சிரிக்க மறந்ததே
மலரும் சிரிப்பில் உறவை மறந்ததே
என் கண்மணி பனிதுளி கண் மீதிலா
விண் மீதிலே வலம் வரும் நீ வெண்ணிலா
அழகு நிலவு சிரிக்க மறந்ததே
விதைப்பதும் அது முளைப்பதும்
யார் சொல்லித்தான்
முளைப்பதும் அது விளைவதும்
யார் கையில்தான்
மலர்வதும் அது மணப்பதும்
யார் பார்த்துதான்
மணப்பதும் அது நிலைப்பதும்
யார் கேட்டுதான்
யாரோ எழுதிய பாதை
புரிந்தால் விளங்கிடும் கீதை
நினைவே விலகிடு நினைத்தால் விலை கொடு
உறவே உறவிலே உருகியே எழுதடி
அழகு நிலவு சிரிக்க மறந்ததே
மலரும் சிரிப்பில் உறவை மறந்ததே
என் கண்மணி பனிதுளி கண் மீதிலா
விண் மீதிலே வலம் வரும் நீ வெண்ணிலா
அழகு நிலவு சிரிக்க மறந்ததே




Ilaiyaraaja feat. Mano - My Dear Marthandan (Original Motion Picture Soundtrack)




Attention! Feel free to leave feedback.