M.M.Manasi - Yaaro Yaaro Lyrics

Lyrics Yaaro Yaaro - M.M.Manasi



யாரோ யாரோ - நித்தம் யாரோ?
கள்வன் கள்வன் - உந்தன் பேரோ?
உன்னை கண்டால் உள்ளம் ஏனோ
துள்ளும் துள்ளும் ஏனோ ஏனோ?
பூமி மேலே
சாமி போல
வந்து நின்றாய்- நீ யாரோ உன் முகவரி தருவாயா?
தீக்குள் என்னை
நிற்க்க வைத்து
Petrol ஊத்தி நீ போனால்
நான் எங்கே தப்பி செல்வேனோ?
இடியாக என்னை தாக்கி
போனாயே நீயே நீயே
மழையாக என்னை நனைத்து
போனாயே ஏனோ நீ
அழகாலே யுத்தம் செய்து
அலை மோத வைத்தாய் நீயே
அனாலாக என்னை மோதிக் கொன்றாய் நீயே
யாரோ யாரோ - நித்தம் யாரோ?
கள்வன் கள்வன் - உந்தன் பேரோ?
உன்னை கண்டால் உள்ளம் ஏனோ
துள்ளும் துள்ளும் ஏனோ ஏனோ?
பூமி மேலே
சாமி போல
வந்து நின்றாய் - நீ யாரோ உன் முகவரி தருவாயா?
பூகம்பம் கூட
புரட்டாது என்னை
பூ பந்து ஒன்று ஊதித் தள்ளுதே!
அணு குண்டு கூட
அசைக்காத நெஞ்சை
துணு குன்னு பார்வை தூளாய் ஆக்குதே!
உந்தன் வெல்வெட்டு
கண்ணாலே
வெட்டி சாய்கின்றாய்
என்னை நாய் குட்டி
போலே தான் மேய்க்கின்றாயே
யாரோ யாரோ - நித்தம் யாரோ?
கள்வன் கள்வன் - உந்தன் பேரோ?
உன்னை கண்டால் உள்ளம் ஏனோ
துள்ளும் துள்ளும் ஏனோ ஏனோ?
நான் பார்த்த ஆண்கள்
ஒரு கோடி தாண்டும்
ஆனாலும் உனை போல் யாரும் இல்லையே!
எனை பார்த்த ஆண்கள்
பல கோடி தாண்டும்
ஆனாலும் உனை போல் பார்க்கவில்லையே!
உந்தன் அழகாலே எனை கொல்ல கடவுள் நினைத்தானோ!
இல்லை எனக்காக உனை வாழ சொன்னானோடா?
யாரோ யாரோ - நித்தம் யாரோ?
கள்வன் கள்வன் - உந்தன் பேரோ?
உன்னை கண்டால் உள்ளம் ஏனோ
துள்ளும் துள்ளும் ஏனோ ஏனோ?



Writer(s): Ss Thaman, Eknaath


M.M.Manasi - Savaale Samaali (Original Motion Picture Soundtrack)



Attention! Feel free to leave feedback.