P. Susheela - Thiruparankunrathile Lyrics

Lyrics Thiruparankunrathile - P. Susheela



திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருச் செந்தூரிலே வேலாடும் உன்
திருப்புகழ் பாடியே கடலாடும்!
திருச் செந்தூரிலே வேலாடும் உன்
திருப்புகழ் பாடியே கடலாடும்!
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
பழநியிலே இருக்கும் கந்தப் பழம் நீ
பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்
பழநியிலே இருக்கும் கந்தப் பழம் நீ
பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்
பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்!
பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்!
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு உன்
சிங்கார மயிலாட தோட்டமுண்டு
சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு உன்
சிங்கார மயிலாட தோட்டமுண்டு
உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை
உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை
அங்கு உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை!
அங்கு உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை! திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருச் செந்தூரிலே வேலாடும் உன்
திருப்புகழ் பாடியே கடலாடும்!
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்



Writer(s): K Devanarayanan, Y.n. Sharma


P. Susheela - Kandan Karunai
Album Kandan Karunai
date of release
05-12-2015




Attention! Feel free to leave feedback.