S. P. Balasubrahmanyam feat. Harini - Azhagana Rakshasiyea Lyrics

Lyrics Azhagana Rakshasiyea - S. P. Balasubrahmanyam feat. Harini




அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வார்த்தயிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே
அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே
அருகம்புல்லுக்கு அறுக்கத் தெரியுமா
கொழந்த கொமரி நான் ஆமா
அயிர மீனுதான்
கொக்க முழுங்குமா அடுக்குமா
வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற
கடலக்காடு நீ ஆமா
உயிர உரிச்சு நீ கயிர திரிக்கிற
சுகம் சுகமா
கிளியே... ஆலங்கிளியே...
குயிலே... ஏலங்குயிலே...
அழகான ராட்சசியே
அடினெஞ்சில் குதிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே
சூரியன ரெண்டு துண்டு செஞ்சு
கண்ணில் கொண்டவளோ... அஹோ
சந்திரன கள்ளுக்குள்ள ஊர வெச்ச
பெண்ணிவளோ
ராத்திரிய தட்டித்தட்டி கெட்டி செஞ்சி
மையிடவோ அஹா
மின்மினிய கன்னத்துல ஒட்ட வெச்சுக்
கைதட்டவோ
துருவி என்னத் தொலச்சிபுட்ட
தூக்கம் இப்ப தூரமய்யா...
தலைக்கு வெச்சி நான் படுக்க
அழுக்கு வேட்டி தாருமய்யா...
தூங்கும் தூக்கம் கனவா
கிளியே... ஆலங்கிளியே...
குயிலே... ஏலங்குயிலே...
அழகான ராட்சசியே
அடிநெஞ்சில் குதிக்கிறியே...
முட்டாசு வார்த்தயிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமணையில் நறுக்குறியே
சோளக்கொல்ல பொம்மையோட
சோடி சேர்ந்து ஆடும் முல்ல
சோளக்கொல்ல பொம்மையோட
சோடி சேர்ந்து ஆடும் முல்ல
தேன் கூட்டப் பிச்சி பிச்சி
எச்சி வெக்க லட்சியமா அஹா
காதல் என்ன கட்சி விட்டுக்
கட்சி மாறும் காரியமா
பொண்ணு சொன்ன தலகீழா
ஒக்கிப்போட முடியுமா அஹா
நான் நடக்கும் நிழலுக்குள்ள
நீ வசிக்க சம்மதமா
நீராக நானிருந்தால் உன் நெத்தியில நானிறங்கி
கூரான உன் நெஞ்சில் குதிச்சி அங்க குடியிருப்பேன்
ஆணா வீணா போனேன்...
கிளியே... ஆலங்கிளியே...
குயிலே... ஏலங்குயிலே...
அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வார்த்தயிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமணையில் நறுக்குறியே
அருகம்புல்லுக்கு அறுக்கத் தெரியுமா
கொழந்த கொமரி நான் ஆமா
அயிர மீனுதான்
கொக்க முழுங்குமா அடுக்குமா
வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற
கடலக்காடு நீ ஆமா
உயிர உரிச்சு நீ கயிர திரிக்கிற
சுகம் சுகமா






Attention! Feel free to leave feedback.