Shankar Mahadevan - Thalattum Katre Vaa Lyrics

Lyrics Thalattum Katre Vaa - Shankar Mahadevan




தாலாட்டும் காற்றே வா
தலை கோதும் விரலே வா
தொலை தூர நிலவே வா
தொட வேண்டும் வானே வா
உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்
என் ஜென்மம் வீணென்று போவேனோ?
உன் வண்ண திருமேனி சேராமால்
என் வயது பாழ் என்று ஆவேனோ?
உன் அழகு ராஜாங்கம் ஆளாமல்
என் ஆவி சிறிதாகிப் போவேனோ?
என்னுயிரே நீதானோ.?
என்னுயிரே நீதானோ.?
தாலாட்டும் காற்றே வா
தலை கோதும் விரலே வா
தொலை தூர நிலவே வா
தொட வேண்டும் வானே வா
கண்ணுக்குள் கண் வைத்து
கண் இமையால் கண் தடவி
சின்ன தொரு சிங்காரம்
செய்யாமல் போவேனோ?
பேச்சிழந்த வேளையிலே
பெண் அழகு என் மார்பில்
மூச்சு விடும் ரசனையை
நுகராமால் போவேனோ
உன் கட்டு கூந்தல் காட்டில்
நுழையாமல் போவேனோ?
அதில் கள்ளத் தேனைக் கொஞ்சம்
பருகாமல் போவேனோ?
நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை
ஒலிப்பதிவு நான் செய்ய மாட்டேனோ?
நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை
ஒலிப்பதிவு நான் செய்ய மாட்டேனோ?
நீ ஊடல் கொண்டாடும் பொழுதுகளில்
அதை உனக்கு ஒலி பரப்ப மாட்டேனோ?
என்னுயிரே நீதானோ.?
என்னுயிரே நீதானோ.?
தாலாட்டும் காற்றே வா
தலைகோதும் விரலே வா
ஒரு நாள் ஒரு பொழுது
உன் மடியில் நான் இருந்து
திருநாள் காணாமல்
செத்தொழிந்து போவேனோ?
தலையெல்லாம் பூக்கள் பூத்து
தள்ளாடும் மரம் ஏறி
இலையெல்லாம் உன் பெயரை
எழுதாமல் போவேனோ?
உன் பாதம் தாங்கி நெஞ்சில்
பதியாமல் போவேனோ?
உன் பன்னீர் எச்சில் ருசியை
அறியாமல் போவேனோ?
உன் உடலை உயிர் விட்டு போனாலும்
என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ?
உன் உடலை உயிர் விட்டு போனாலும்
என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ?
உன் அங்கம் எங்கெங்கும் உயிராகி
நீ வாழும் வரை நானும் வாழ்வேனோ?
என் உரிமை நீதானோ.?
என் உரிமை நீதானோ.?
தாலாட்டும் காற்றே வா
தலை கோதும் விரலே வா
தொலை தூர நிலவே வா
தொட வேண்டும் வானே வா
உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்
என் ஜென்மம் வீணென்று போவேனோ?
உன் வண்ண திருமேனி சேராமால்
என் வயது பாழ் என்று ஆவேனோ?
உன் அழகு ராஜாங்கம் ஆளாமல்
என் ஆவி சிறிதாகிப் போவேனோ?
என்னுயிரே நீதானோ.?
என்னுயிரே நீதானோ...?



Writer(s): Vairamuthu


Attention! Feel free to leave feedback.