Srinivas feat. Sujatha - Mudhal Murai Killi Parthen Lyrics

Lyrics Mudhal Murai Killi Parthen - Sujatha , Srinivas



முதல் முறை கிள்ளிப் பார்த்தேன்
முதல் முறை கண்ணில் வேர்த்தேன்
எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி மறுமுறை உயிர் கொண்டேன்
உன்னால் இருமுறை உயிர் கொண்டேன்
முதல் முறை கிள்ளிப் பார்த்தேன் முதல் முறை கண்ணில் வேர்த்தேன்
எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி மறுமுறை உயிர் கொண்டேன்
உன்னால் இருமுறை உயிர் கொண்டேன்
முதல் முறை எனக்கு அழுதிடத் தோன்றும் ...ஏன்
கண்ணீருண்டு சோகமில்லை ஆமாம் மழை யுண்டு மேகமில்லை
கால்களில் கிடந்த சலங்கையைத் திருடி
அன்பே என் மனசுக்குள் கட்டியதென்ன
சலங்கைகள் அணிந்தும் சத்தங்களை மறைத்தாய்
பெண்ணே உன் உள்ளம் தன்னை ஒளித்ததென்ன
விதையொன்று உயிர் கொள்ள வெப்பக்காற்று ஈரம் வேண்டும்
காதல் வந்து உயிர் கொள்ள காலம் கூட வேண்டும்
ஒரு விதை உயிர் கொண்டது ஆனால் இரு நெஞ்சி ல் வேர் கொண்டது
சலங்கையே கொஞ்சம் பேசு மௌனமே பாடல் பாடு
மொழியெல்லாம் ஊமையானால் கண்ணீர் உரையாடும் அதில்
கவிதை அரங்கேறும்
பாதையும் தூரம் நான் ஒரு பாரம்
என்னை உன் எல்லை வரை கொண்டு செல்வாயா
உடலுக்குள் இருக்கும் உயிர் ஒரு சுமையா
பெண்ணே உன்னை நானும் விட்டுச் செல்வேனா
தந்தை தந்த உயிர் தந்தேன் தாய் தந்த உடல் தந்தேன்
உறவுகள் எல்லாம் சேர்த்து உன்னிடம் கண்டேன்
மொத்தத்தையும் நீ கொடுத்தாய் ஆனால்
முத்தத்துக்கோ நாள் குறித்தே




Srinivas feat. Sujatha - Sangamam
Album Sangamam
date of release
16-07-1999




Attention! Feel free to leave feedback.