Sujatha - Eatho Oru Paatu (Female Vocals) Lyrics

Lyrics Eatho Oru Paatu (Female Vocals) - Sujatha

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்
என் கண்களின் இமைகளிலே சில ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே சில ஞாபகம் கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்
அம்மா கை கோர்த்து நடை பழகிய ஞாபகமே
தனியே நடை பழகி நான் தொலைந்தது ஞாபகமே
புத்தகம் நடுவே மயிலிறகை நான் வளர்த்தது ஞாபகமே
சின்ன குழந்தையில் சேலை கட்டும் ஞாபகம்
வெட்கம் வந்ததும் முகத்தை மூடும் ஞாபகம்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்
ரயிலின் பயணத்தில் மரம் நகர்ந்ததும் ஞாபகமே
சுற்றும் ராட்டினத்தில் நான் மயங்கிய ஞாபகமே
காகித கப்பல் கவிழ்ந்ததுமே நான் அழுதது ஞாபகமே
கட்ட பொம்மனின் கதையை கேட்ட ஞாபகம்
அட்டை கத்தியில் சண்டை போட்ட ஞாபகம்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்
என் கண்களின் இமைகளிலே சில ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே சில ஞாபகம் கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தேனூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும்

Writer(s): s. a. rajkumar

Attention! Feel free to leave feedback.