T. M. Soundararajan - Thaaimel Aanai Lyrics

Lyrics Thaaimel Aanai - T. M. Soundararajan




தாய் மேல் ஆணை
தமிழ் மேல் ஆணை
தாய் மேல் ஆணை, தமிழ் மேல் ஆணை
குருடர்கள் கண்ணை திறந்து வைப்பேன்
தனியானாலும் தலை போனாலும்
தீமைகள் நடப்பதை தடுத்து நிற்பேன்
தாய் மேல் ஆணை, தமிழ் மேல் ஆணை
குருடர்கள் கண்ணை திறந்து வைப்பேன்
தனியானாலும் தலை போனாலும்
தீமைகள் நடப்பதை தடுத்து நிற்பேன்
இருட்டினில் வாழும் இதயங்களே
கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள்
நல்லவர் உலகம் எப்படி இருக்கும்
என்பதை பாருங்கள்
எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான்
என்பது கேள்வி இல்லை
அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை உணர்ந்தால்
வாழ்க்கையில் தோல்வியில்லை
வாழ்க்கையில் தோல்வியில்லை
தாய் மேல் ஆணை
தமிழ் மேல் ஆணை
தாய் மேல் ஆணை, தமிழ் மேல் ஆணை
குருடர்கள் கண்ணை திறந்து வைப்பேன்
தனியானாலும் தலை போனாலும்
தீமைகள் நடப்பதை தடுத்து நிற்பேன்
தனி ஒரு மனிதன் திருந்தி விட்டால்
சிறைச்சாலைகள் தேவை இல்லை
இருப்பதை எல்லாம் பொதுவில் வைத்ததாலே
எடுப்பவர் யாரும் இல்லை
பிறவியில் எவனும் பிழைகளை சுமாந்தே
வாழ்க்கையை தொடங்கவில்லை
பின்பு அவனிடம் வளர்ந்த குறைகளை சொன்னால்
வார்த்தையில் அடங்கவில்லை
வார்த்தையில் அடங்கவில்லை
தாய் மேல் ஆணை, தமிழ் மேல் ஆணை
குருடர்கள் கண்ணை திறந்து வைப்பேன்
தனியானாலும் தலை போனாலும்
தீமைகள் நடப்பதை தடுத்து நிற்பேன்
தாய் மேல் ஆணை, தமிழ் மேல் ஆணை
தாய் மேல் ஆணை, தமிழ் மேல் ஆணை



Writer(s): Vaalee, M.s. Viswanathan


Attention! Feel free to leave feedback.
//}