Yuvan Shankar Raja, Siddharth & Sruthi S - Unn Badhil Vendi Lyrics

Lyrics Unn Badhil Vendi - Yuvan Shankar Raja , Siddharth



உன் பதில் வேண்டி
யுகம் பல தான்டி
உன்மத்தம் கொண்டே
காத்திருப்பேனோ
உன்னிரு பார்வை
விழுகின்ற தொலைவில்
வாழ்கின்ற யோகம்
நானடைவேனோ
வழிப்போக்கனின் வாழ்விலே
நிழலாக வருகிறாய்
நான் கேட்கும் முன்னமே
இளைப்பாற தருகிறாய்
தருகிறாய்... நீ
இளைப்பாறல் முடிந்ததும்
போதும் போ என்கிறாய்
புலன் ஐந்தையும்
கொல்கிறாய் கொல்கிறாய் நீ...
உனக்காக நானும்
கடல் தாண்டி போவேன்
மலைமேலொரு கடல் வேண்டுமா
மழைக்கொண்டு செய்வேன்
கடல் நீளம் சேர்த்து
கனவள்ளி கோர்த்து
என் மூச்சினை நூலாக்கியே
நகை ஒன்று செய்வேன்
யாரும்...
நம்பாத கதைகள்
நீ சொல்லு பெண்ணே
நிஜம் ஆக்கி வைப்பேன்
வேறாரும் எங்கும்
இல்லாத பூமி
பார்க்காத வானம்
நாம் வாழ போவோம்
வழிப்போக்கனின் வாழ்விலே
நிழலாக வருகிறாய்
நான் கேட்கும் முன்னமே
இளைப்பாறல் தருகிறாய்
தருகிறாய்... நீ
இளைப்பாறல் முடிந்ததும்
போதும் போ என்கிறாய்
புலன் ஐந்தையும்
கொல்கிறாய் கொல்கிறாய் நீ...
வருகின்ற காற்றில்
புதிதான வாசம்
நொடி நேரத்தில் எனை மாற்றியே
மாயங்கள் செய்தாய்
எதிர் பார்த்த எல்லாம்
கைவிட்டு போக
பொய் என்பதா மெய் என்பதா
கை நீட்டி வந்தாய்
காணல் நீரோடுதானே
மீன் தேடி தானே
நான் இன்று போனேன்
குறை ஒன்றுமில்லை
பிறைமீதும் கரைகள்
உண்டென்று சொல்லி
நீ இங்கு வந்தாய்
வழிப்போக்கனின் வாழ்விலே
நிழலாக வருகிறாய்
நான் கேட்கும் முன்னமே
இளைப்பாறல் தருகிறாய்
தருகிறாய்... நீ
விடியாதொரு நாளிலே
அடடா என் வானிலே
வெளிச்சம் போல் வருகிறாய்
வாழ்க்கையே நீ...



Writer(s): yuvan shankar raja


Yuvan Shankar Raja, Siddharth & Sruthi S - Taramani (Original Motion Picture Soundtrack)
Album Taramani (Original Motion Picture Soundtrack)
date of release
31-12-2016



Attention! Feel free to leave feedback.