Yuvan Shankar Raja feat. Chinmayi - Naan Ini Kaatril Lyrics

Lyrics Naan Ini Kaatril - Yuvan Shankar Raja , Chinmayi Sripada



நான் இனி காற்றில் நடக்க போகிறேன்
கூடவே உன் கைகள் கோர்த்து கொள்கிறேன்
இந்த பிரபஞ்சம் தாண்டியே
ஒரு பயணம் போகலாம்
அதில் மூச்சு கூட தேவை
இல்லை முத்தம் ஒன்றில்
சேர்ந்து செல்லலாம்
மிதந்து மிதந்து வந்தாய்
நெஞ்சில் நடந்து நடந்து சென்றாய்
அசந்து அசந்து நின்றேன் ஐயோ
அளந்து அளந்து கொன்றாய்
உன் போர்வை இருட்டிலே
நான் தொலைந்து போகிறேன்
ஒரு ஜாடை செய்யடா
உன் பாத சுவட்டில் தூசி போல
படிகிறேன் மடிகிறேன்
மெல்லிய சாரலும் மஞ்சளாய் வெயிலும்
சேர்ந்தது போல் உந்தன்
வெட்கமும் கோபமும் சேர்ந்ததடி
தெத்துப்பல் கீறலும் கொஞ்சலடி
காதலும் இல்லாத
காமமும் இல்லாத
ஓர் நொடி ஓர் நொடி
பார் சுற்றி பார்
நம்மை போல் இனி யாரடா காதலிப்பார்
நீ எந்தன் புத்தகம் மெல்லிசை
புல்நுனி தேய்பிறை
யாவிலும் நீயே
கட்டிலும் நீ கோவிலும் நீ
தாய் மடி ஆகிடும்
தோழியும் நான் தானே
பாரதி போல் ஆனேன்
பைத்தியம் போல் ஆனேன்
உன்னால் நானே
மிதந்து மிதந்து வந்தாய்
நெஞ்சில் நடந்து நடந்து சென்றாய்
அசந்து அசந்து நின்றேன் ஐயோ
நெளிந்து வளைந்து கொன்றாய்
உன் கூந்தல் இருட்டிலே
உன் போர்வை இருட்டிலே
நான் தொலைந்து போகிறேன்
நான் தொலைந்து போகிறேன்
ஒரு ஜாடை செய்யடி
ஒரு ஜாடை செய்யடா
உன் பாத சுவட்டில் தூசி போல
படிகிறேன் மடிகிறேன்
அந்தி மழையில் பச்சை தளிர்கள்
நனைத்த வாசம்
உந்தன் உடலில் சில பகுதி அதிலே வீசும்
எந்தன் இறுதி மூச்சு முடிந்து
கண்கள் மூடும் தருணமே
உனது உருவம் காட்டுமே
உன்னோட நினைவு நான்
காற்றில் மிதக்கும் இசை போல்
உந்தன் காதில் நுழைந்து கொள்வேன்
காட்டில் கிடக்கும் இலை போல்
என் கூந்தல் கலைத்து போகுமே
இந்த பூமி போதுமா
இந்த பூமி போதுமா
இந்த பூமி போதுமா
இன்னும் வேறு வேண்டுமா
இன்னும் நீ பார்த்த பார்வைகள்
நீ பார்த்த பார்வைகள்
அது காலவெளியில் காற்று போல



Writer(s): yuvan shankar raja


Yuvan Shankar Raja feat. Chinmayi - Yaakkai (Original Motion Picture Soundtrack)
Album Yaakkai (Original Motion Picture Soundtrack)
date of release
13-10-2016



Attention! Feel free to leave feedback.