Ilaiyaraaja - Thendral Lyrics

Lyrics Thendral - Yuvanshankar Raja

தென்றல் புதிது தேனினும் இனிது தெரியாதா உனக்கு?
கனவுகள் பெரிது கைவரும் நம்பு நடக்காதா நமக்கு
இளமை இனிமை கைகோர்க்க
புதுமை புதுமை விளையாட்டு
இளமைக்காலம் புதிய கோலம் மறைந்திடும் வருந்தாதே விட்டுவிடு
தென்றல் புதிது தேனினும் இனிது தெரியாதா உனக்கு
கனவுகள் பெரிது கைவரும் நம்பு நடக்காதா நமக்கு
ஓடும் நதியில் நீரோட்டங்கள்
ஒன்று போல கண்டாலும்
ஓடும் நதியும் ஒரு நீர் அல்ல
மாறி போகும் நீராகும்
கால ஓட்டமும் அதுபோல்
திரும்பியே வந்திடாதே
நல்ல காலங்கள் வந்தால்
தவறவே விட்டுவிடாதே
பள்ளிப்படிப்பு வாழ்க்கை இப்பொழுது
வாழ்க்கை கொடுக்கும் பாடம் எப்பொழுது
தென்றல் புதிது தேனினும் இனிது தெரியாதா உனக்கு?
கனவுகள் பெரிது கைவரும் நம்பு நடக்காதா நமக்கு
பூத்திருக்கும் மலரை கண்டால்
பொன்னின் வண்டு விரைந்தோடும்
முத்திருக்கும் கடலை தானே அலைந்து வழிந்து நதி தேடும்
உனக்குப் பிடித்த ஓர் துணையே
உனை தேடியே வந்திடாதோ
கனவு கண்ட வாழ்வினையே
கையிலே தந்திடாதோ
வாட்டம் எதற்கு சோர்வை விட்டுவிட்டு
வானம் இருக்கு ஏறி தொட்டுவிட்டு
தென்றல் புதிது தேனினும் இனிது தெரியாதா உனக்கு
கனவுகள் பெரிது கைவரும் நம்பு நடக்காதா நமக்கு
இளமை இனிமை கைகோர்க்க
புதுமை புதுமை விளையாட்டு
இளமைக்காலம் புதிய கோலம் மறைந்திடும் வருந்தாதே விட்டுவிடு
தென்றல் புதிது தேனினும் இனிது தெரியாதா உனக்கு?
கனவுகள் பெரிது கைவரும் நம்பு நடக்காதா நமக்கு

Writer(s): Ilaiyaraaja, Pulavar Pulamaippithan

Attention! Feel free to leave feedback.