A.R. Rahman, Unni Menon, K. S. Chithra & Mano - Veerapandi Kotayyile (From "Thiruda Thiruda") paroles de chanson

paroles de chanson Veerapandi Kotayyile (From "Thiruda Thiruda") - Unni Menon , K. S. Chithra , Mano




வீரபாண்டி கோட்டையிலே
மின்னல் அடிக்கும் வேளையிலே
ஊரும் ஆறும் தூங்கும் போது
பூவும் நிலவும் சாயும் போது
கொலுசு சத்தம் மனசை திருடியதே
வீரபாண்டி கோட்டையிலே
மை இருட்டு வேளையிலே
கொலுசு சத்தம் மனசை திருடியதே
வீரபாண்டி கோட்டையிலே
மின்னல் அடிக்கும் வேளையிலே
வளைவி சத்தம் இதயம் திருடியதே
வீரபாண்டி கோட்டையிலே
வெள்ளி முளைக்கும் வேளையிலே
பருவப்பொண்ண திருடி தழுவ
திட்டமிட்ட கள்வர்களே
மிஞ்சி கொலுசு நெஞ்சை திருடியதோ
வைரங்கள் தாரேன்
வளமான தோளுக்கு
தங்க செருப்ப தாரேன்
கனி வாழை காலுக்கு
பவளங்கள் தாரேன்
பால் போன்ற பல்லுக்கு
முத்து சரங்கள் தாரேன்
முன் கோவச்சொல்லுக்கு
உன் ஆசை எல்லாம்
வெறும் கானல் நீரு
நீ ஏழம் போட வேறாளப்பாரு
நீ சொல்லும் சொல்லுக்குள்ள
என் பொழப்பு வாழும் புள்ள
நீ போட்ட வெத்தலைக்கு
என் நாக்கு ஊரும் புள்ள
வீரபாண்டி கோட்டையிலே
மை இருட்டு வேளையிலே
கொலுசு சத்தம் மனசை திருடியதே
வீரபாண்டி கோட்டையிலே
மின்னல் அடிக்கும் வேளையிலே
வளைவி சத்தம் இதயம் திருடியதே
ரெட்டை சூரியன் வருகுதம்மா
ஒற்றை தாமரை கருகுதம்மா
வாள்முனையில் ஒரு சுயவரமா
மங்கைக்குள் ஒரு பயம் வருமா
ஒரு தமயந்தி நானம்மா
என் நல ராஜன் யாரம்மா
மணவாளன் இங்கே நானம்மா
மஹாராஜன் இங்கே நானம்மா
இது மாலை மயக்கம்
என் மனதில் நடுக்கம்
நெஞ்சில் வார்த்தை துடிக்கும்
நீ ரெண்டில் ஒன்னு சொல்ல சொன்னா
ஊமைகிளி என்ன சொல்லும்
நீசொல்லும் சொல்லுக்குள்ள
என் பொழப்பு வாழும் புள்ள
நீ போட்ட வெத்தலைக்கு
என் நாக்கு ஊரும் புள்ள
வீரபாண்டி கோட்டையிலே
மை இருட்டு வேளையிலே
கொலுசு சத்தம் மனசை திருடியதே
வீரபாண்டி கோட்டையிலே
மின்னல் அடிக்கும் வேளையிலே
வளைவி சத்தம் இதயம் திருடியதே
நீசொல்லும் சொல்லுக்குள்ள
என் பொழப்பு வாழும் புள்ள
நீ போட்ட வெத்தலைக்கு
என் நாக்கு ஊரும் புள்ள
வீரபாண்டி கோட்டையிலே
வெள்ளி முளைக்கும் வேளையிலே
பருவப்பொண்ண திருடி தழுவ
திட்டமிட்ட கள்வர்களே
மிஞ்சி கொலுசு நெஞ்சை திருடியதோ
வீரபாண்டி கோட்டையிலே
மின்னல் அடிக்கும் வேளையிலே
காடும் மழையும் தூங்கும்போது
கொலுசு சத்தம் மனசை திருடியதே





Attention! N'hésitez pas à laisser des commentaires.