Haricharan - Bharathiyar (Medley) paroles de chanson

paroles de chanson Bharathiyar (Medley) - Haricharan



ஆசை முகம் மறந்து போச்சே -இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகமறக்க லாமோ?
தேனை மறந்திருக்கும் வண்டும் -ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் -இந்த
வைய முழுதுமில்லை தோழி
பாயும் ஒளி நீ எனக்கு,
பார்க்கும் விழி நான் உனக்கு.
தோயும் மது நீ எனக்கு,
தும்பியடி நான் உனக்கு.
வீணையடி நீ எனக்கு,
மேவும் விரல் நான் உனக்கு.
பூணும் வடம் நீ எனக்கு,
புது வைரம் நான் உனக்கு.
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே
என்னைக் கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்
ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி
ஆடித் திரிதல் கண்டால் உன்னைப்போய் ஆவி தழுவுதடி




Haricharan - Alaipayuthey & Other Tamil Classics
Album Alaipayuthey & Other Tamil Classics
date de sortie
27-02-2014




Attention! N'hésitez pas à laisser des commentaires.