Hiphop Tamizha feat. Sudharshan Ashok - Oxygen paroles de chanson

paroles de chanson Oxygen - Hiphop Tamizha , Sudharshan Ashok




Oxygen தந்தாயே முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே?
ஓடும் நதியில் இலையைப் போலே நாட்கள் நகர்கிறதே
இலையின் மீது நிலவின் ஒளியோ சூடாய் பொழிகிறதே
கலாபமே, எனைக் கீறினாய்
மழைமேகமே, பிழையாகினாய்
என் வாசலில், சுவராகினாய்
மீண்டும் ஒரு தூண்டில் இடவா தோன்றினாய்?
Oxygen தந்தாயே முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே?
போனாய் எதனாலே?, போனாய் எதனாலே?, எதனாலே?
ஓஹோ ஹ்ம்ம்
உலா, உலா, கல்லூரி மண்ணிலா
உன் தீண்டல் ஒவ்வொன்றும்
எனை கொய்யும் தென்றலா?
முயல் இடை திரை நீங்கும் போதெல்லாம்
சிறு மோகம் வந்ததோ என் சேலை Cindrella
வெட்டவெளி வானம் எங்கும்
வட்டமுகம் கண்டேன் கண்டேன்
நட்ட நடு நெஞ்சில் நெஞ்சில்
யுத்தம் இடும் காதல் கொண்டேன்
காலம் அது தீர்ந்தால் கூட
காதல் அது வாழும் என்றேன்
பாவை நீ பிரியும் போது
பாதியில் கனவை கொன்றேன்
Oxygen தந்தாயே முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே?
தனியாக நடமாடும் பிடிவாதம் உனது
நிழலோடும் உரசாத தன்மானம் எனது
எடை இல்லா பொருளல்ல
அடி காதல் மனது
அகலாத ஒரு நினைவு
அது மலையின் அளவு
ஆளற்ற அறையில் கூட
அநியாய தூரம் தொல்லை
உன் இதயம் அறியாதழகே
என் இதயம் எழுதும் சொல்லை
மௌனமாய் தூரம் நின்றால்
மடியிலே பாரம் இல்லை
மீண்டும் ஒரு காதல் செய்ய
கண்களில் ஈரம் இல்லை
Oxygen தந்தாயே முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே?
ஓடும் நதியில் இலையைப் போலே நாட்கள் நகர்கிறதே
இலையின் மீது நிலவின் ஒளியோ சூடாய் பொழிகிறதே
கலாபமே, எனைக் கீறினாய்
மழைமேகமே, பிழையாகினாய்
என் வாசலில், சுவராகினாய்
மீண்டும் ஒரு தூண்டில் இடவா தோன்றினாய்?



Writer(s): Kabilan, Hiphop Tamizha



Attention! N'hésitez pas à laisser des commentaires.