Ilaiyaraaja feat. S. P. Balasubrahmanyam & S. Janaki - Mani Osai paroles de chanson

paroles de chanson Mani Osai - S. P. Balasubrahmanyam , Ilaiyaraaja , S. Janaki




மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர்ந்து
ஒரு கோயில் சேர்ந்த பொழுது
அந்தக் கோயிலின் மணி வாசலை
இங்கு மூடுதல் முறையோ?
ஹ்ம்... மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
கண்ணன் பாடும் பாடல் கேட்க...
ராதை வந்தால் ஆகாதோ?
ராதையோடு ஆசைக் கண்ணன் ஆ...
பேசக் கூடாதோ?
கண்ணன் பாடும் பாடல் கேட்க
ராதை வந்தால் ஆகாதோ?
ராதையோடு ஆசைக் கண்ணன்
பேசக் கூடாதோ?
ராதை மனம் ஏங்கலாமோ?
கண்ணன் மனம் வாடலாமோ?
வாழ்க்கை மாறுமோ?
நெஞ்சம் தாங்குமோ?
மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
பாதை மாறிப் போகும் போது...
ஊரும் வந்தே சேராது
தாளம் மாறிப் போடும் போது ஆ...
ராகம் தோன்-
பாதை மாறிப் போகும்போது
ஊரும் வந்தே சேராது
தாளம் மாறிப் போடும்போது
ராகம் தோன்றாது
பாடும் புது வீணை இங்கே
ராகம் அதில் மாறும் அங்கே
காலம் மாறுமோ?
தாளம் சேருமோ?
மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர்ந்து
ஒரு கோயில் சேர்ந்த பொழுது
அந்தக் கோயிலின் மணி வாசலை
இங்கு மூடுதல் முறையோ...
ஹ்ம்... மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து



Writer(s): Ilaiyaraaja


Ilaiyaraaja feat. S. P. Balasubrahmanyam & S. Janaki - Payanangal Mudivathillai (Original Motion Picture Soundtrack)



Attention! N'hésitez pas à laisser des commentaires.