Ilaiyaraaja - Kanne Navamaniye paroles de chanson

paroles de chanson Kanne Navamaniye - Ilaiyaraaja




கண்ணே நவமணியே
உன்ன காணாமல் கண் உறங்குமோ
ஆயிரம் பிச்சிபூவும் அரும்பரும்பா பூத்தாலும்
வாசம் உள்ள பிச்சி எனக்கு வாய்க்காது எக்காலும்
கண்ணே நவமணியே
உன்ன காணாமல் கண் உறங்குமோ
ஒன்னு ரெண்ட பெத்திருந்தா
துக்கம் அது தோணாது
உன்னை நானும் விட்டதனால்
கண்ணு ரெண்டும் தூங்காது
ஆடாத ஊஞ்சல்களை
ஆடவைத்த வண்ண மயில்
பாடாத சொந்தங்களை
பாட வைத்த சின்ன குயில்
எங்கிருக்கு என் உயிரே
என்னை விட்டு நீ தனியா
வந்து விடு கண் மணியே
எனக்கும் இங்கு ஓர் துணையா
கண்ணே நவமணியே
உன்ன காணாமல் கண் உறங்குமோ
கண்ணே நவமணியே
உன்ன காணாமல் கண் உறங்குமோ
கண்ணே நவமணியே
உன்னை காணாமல் கண் உறங்குமோ
கண்ணே நவமணியே
உன்னை காணாமல் கண் உறங்குமோ
ஆயிரம் பிச்சி பூவும் அரும்பரும்பா பூத்தாலும்
வாசமுள்ள பிச்சி எனக்கு வாய்க்காது எக்காலும்
கண்ணே நவமணியே
உன்னைக் காணாமல் கண் உறங்குமோ
தவமிருந்து பெற்ற கிளி
தவிக்கவிட்டு போனது போல்
துணையாக வந்த கிளி
தனியாக போய்விடுமோ
ஆடாத ஊஞ்சல்களை
ஆடவைத்த வண்ண மயில்
பாடாத சொந்தங்களை
பாட வைத்த சின்ன குயில்
என்னை விட்டு தன்னந்தனி
வாழ்ந்திடுமோ வாழ்ந்திடுமோ
என்னுயிரும் என்னை விட்டு
போய் விடுமோ போய் விடுமோ
கண்ணே நவமணியே
உன்னை காணாமல் கண் உறங்குமோ
கண்ணே நவமணியே
உன்னை காணாமல் கண் உறங்குமோ
ஆயிரம் பிச்சிபூவும் அரும்பரும்பா பூத்தாலும்
வாசம் உள்ள பிச்சி எனக்கு வாய்க்காது எக்காலும்
கண்ணே நவமணியே
உன்ன காணாமல் கண் உறங்குமோ
கண்ணே நவமணியே
உன்ன காணாமல் கண் உறங்குமோ
ஆயிரம் பிச்சிபூவும் அரும்பரும்பா பூத்தாலும்
வாசம் உள்ள பிச்சி எனக்கு வாய்க்காது எக்காலும்
கண்ணே நவமணியே
உன்ன காணாமல் கண் உறங்குமோ
தவமா தவமிருந்து துணையாக வந்த கிளி
தவியா தவிக்கவிட்டு தனியாக சென்றதென்ன
ஊராரின் கண்ணு பட ஊர்கோலம் போனதம்மா
யாரோட கண்ணுபட்டு ஆத்தோடு போனதம்மா
கையிலதான் வச்சிருந்தா தவறி அது போகுமின்னு
மடியில நான் வைச்சிருந்தேன் மடியுமின்னு நெனக்கலியே
கண்ணே நவமணியே
உன்ன காணாமல் கண் உறங்குமோ
கண்ணே நவமணியே
உன்ன காணாமல் கண் உறங்குமோ
ஆயிரம் பிச்சிபூவும் அரும்பரும்பா பூத்தாலும்
வாசம் உள்ள பிச்சி எனக்கு வாய்க்காது எக்காலும்
கண்ணே நவமணியே
உன்ன காணாமல் கண் உறங்குமோ...




Attention! N'hésitez pas à laisser des commentaires.
//}