Ilaiyaraaja - Thenmadhurai paroles de chanson
Ilaiyaraaja Thenmadhurai

Thenmadhurai

Ilaiyaraaja



paroles de chanson Thenmadhurai - Ilaiyaraaja




தென்மதுர சீமையில
மீனாட்சி கோவிலில
தென்மதுர சீமையில
மீனாட்சி கோவிலில
கல்யாணம் எப்போ சொல்லம்மா
என் கண்ணம்மா
சொல்லாம ஏன்டி வெட்கமா
தென்மதுர சீமையில
மீனாட்சி கோவிலில
கல்யாணம் பண்ணிக் கொள்ளுவோம்
என் பொன்னம்மா
சொல்லாம அள்ளிக் கொள்ளுவோம்
நான் என்ன சொல்ல
வார்த்தை ஏதும் சிக்கவில்ல
நல்ல தையில் வெள்ளிக் காலை
நாங்க மாத்தப் போறோம் மாலை
தென்மதுர சீமையில
மீனாட்சி கோவிலில
கல்யாணம் பண்ணிக் கொள்ளுவோம்
என் பொன்னம்மா
சொல்லாம அள்ளிக் கொள்ளுவோம்
மால மயக்கத்துல
மாமன் வீட்டுல
வேலை நான் பார்த்து போவேன் ரூமுல
ஆஹா
பால நான் கொடுத்தா
மாமன் வாங்கல
பார்த்த பார்வையில
எதுவும் தோணல
ஹா
என்னோட மேனியத்தான்
பொன்னாக அரவணைப்பான்
சொன்னா சூறாவளி வேகம்தான்
கண் மூடி இருக்க வைப்பான்
உள்ளூர சிரிக்க வைப்பான்
கண்ணன் சரசத்துல ராஜன்தான்
சொக்குது நின்னு
பொண்ணுன்னு போடுது ஒரு கோலம்தான்
நான் எண்ணி எண்ணிப் பார்த்தேன்
இனி மேல சொல்ல மாட்டேன்
தென்மதுர சீமையில
மீனாட்சி கோவிலில
கல்யாணம் பண்ணிக் கொள்ளுவோம்
என் பொன்னம்மா
சொல்லாம அள்ளிக் கொள்ளுவோம்
ஆஅஆஅஆஆஆ ஆஅஆஅஆஆஆஹா
காலை நேரத்துல
வைகை ஆத்துல
நான்தான் நீராட யாரும் பாக்கல
ஹா
மஞ்சக் கெழங்கெடுத்து
அரைச்சேன் கல்லுல
எடுத்து நான் பூச என்னால் முடியல
ஹா
ஆளரவம் கேட்டதம்மா
அல்லி முகம் வேர்த்ததம்மா
வந்த ஆளு அது யாரம்மா
சந்திரனப் போல வந்து
இந்திரனப் போல அங்கே
வந்தான் மாமன் அவன் தானம்மா
தொட்டு எடுத்து
அங்கங்கே முத்திர வெச்சான் பாரம்மா
அட ரெண்டு பேரும் சிரிச்சோம்
அப்புறம் ஒண்ணா சேர்ந்து குளிச்சோம்
தென்மதுர சீமையில
மீனாட்சி கோவிலில
கல்யாணம் எப்போ சொல்லம்மா
என் கண்ணம்மா
சொல்லாம ஏன்டி வெட்கமா
நான் என்ன சொல்ல
வார்த்தை ஏதும் சிக்கவில்ல
நல்ல தையில் வெள்ளிக் காலை
நாங்க மாத்தப் போறோம் மாலை
தென்மதுர சீமையில
மீனாட்சி கோவிலில
கல்யாணம் பண்ணிக் கொள்ளுவோம்
என் பொன்னம்மா
சொல்லாம அள்ளிக் கொள்ளுவோம்



Writer(s): Ilaiyaraaja, Gangai Amaren


Attention! N'hésitez pas à laisser des commentaires.