K. Veeramani - Ayyappa Swamikkena paroles de chanson
K. Veeramani Ayyappa Swamikkena

Ayyappa Swamikkena

K. Veeramani



paroles de chanson Ayyappa Swamikkena - K. Veeramani




அய்யப்ப சுவாமிக்கென மாலை போட்டபின்
நாமும் அய்யப்பனாகிறோம்
சுவாமி சரணம் என்பதனாலே
நாமும் சாமி ஆகிறோம்
ஒருவருக்கொருவர் சரணம் சொல்வதால்
பணிவும் தன்னால் வருகிறது
வழியில் மேடு பள்ளங்கள் உணர்ந்து
வாழ்வின் அர்த்தமும் புரிகிறது
அய்யப்ப சுவாமிக்கென மாலை போட்டபின்
நாமும் அய்யப்பனாகிறோம்
சுவாமி சரணம் என்பதனாலே
நாமும் சாமி ஆகிறோம்
அவனுக்கென நம்மை அர்ப்பணிப்பதால்
எதையும் செய்ய இயல்கிறது
விடமுடியாத பழக்கமும் கூட
விட்டு விலகி செல்கிறது
பனியும் குளிரும் வெயிலும் மழையும்
பழக்கமாகி போகிறது
கல்லும் முள்ளும் காடும் மலையும்
காலுக்கு மெத்தை ஆகிறது
அய்யப்ப சுவாமிக்கென மாலை போட்டபின்
நாமும் அய்யப்பனாகிறோம்
சுவாமி சரணம் என்பதனாலே
நாமும் சாமி ஆகிறோம்
புலி வந்த போதும் போயென போகும்
நிலை எங்கு செவரியில் அமைகிறது
எது என்ன செய்யும் என்னும் அஞ்சாமை
இதயத்தில் நன்கு பதிகிறது
பம்பா நதியில் பாவம் கரையுது
பதினெட்டு படிகள் அழைக்கிறது
பொன்னம்பலத்தில் உள்ளம் உருகுது
என்னும் சாவல்யம் படைகிறது
அய்யப்ப சுவாமிக்கென மாலை போட்டபின்
நாமும் அய்யப்பனாகிறோம்
சுவாமி சரணம் என்பதனாலே
நாமும் சாமி ஆகிறோம்



Writer(s): K Veeramani Somu, Dr. Ulundurpettai Shanmugam


Attention! N'hésitez pas à laisser des commentaires.