Kaber Vasuki - Maanda Mannan Kaviyam paroles de chanson

paroles de chanson Maanda Mannan Kaviyam - Kaber Vasuki



நானும் ஒரு வீரன்தான்
வார்த்தைகள் என் கோள்
என் பின்னே படை திரண்டால்
என் முன்னே போர்
அச்சம் ஒரு வார்த்தையா
தெரியவே இல்லை
என் எதிரி ஓட்டமும்
புரியவே இல்லை
அமர்ந்த இடத்தில் இருந்து
புரட்சித் துவப்பேன்
என் முகம் கொண்ட கொடிகள்
ஊரில் நடுவேன்
ஆயிரம் அம்புகள்
வானை கிழிக்கும்
என் பெயர் சொல்லிப் பாரு
காற்றில் மிதக்கும்
நான் முகக்கண்ணாடி பார்த்தால்
பழைய அரசன் தோன்றுகிறான்
என் ஆணவ குரலை கேட்டால்
அவனும் சேர்ந்தே ஒலிக்கிறான்
என் வாழ்வில் ஒவ்வொரு நொடியும்
மாண்ட மன்னன் காவியம்
வாழ்ந்த மன்னன் காவியம்
மாண்ட மன்னன் காவியம்
போர்களம் சென்று வந்து சினம் கொண்டேன்
நாடை ஆள ஆசை கொண்டு மன்னன் கொன்றேன்
போர்களம் சென்று வந்து சினம் கொண்டேன்
நாடை ஆள ஆசை கொண்டு
மன்னன் கொன்றேன்
நான் முகக்கண்ணாடி பார்த்தால்
பழைய அரசன் தோன்றுகிறான்
என் ஆணவ குரலைக் கேட்டால்
அவனும் சேர்ந்தே ஒலிக்கிறான்
என் வாழ்வில் ஒவ்வொரு நொடியும்
மாண்ட மன்னன் காவியம்
வாழ்ந்த மன்னன் காவியம்
மாண்ட மன்னன் காவியம்




Kaber Vasuki - Azhagu Puratchi
Album Azhagu Puratchi
date de sortie
09-01-2015




Attention! N'hésitez pas à laisser des commentaires.