Karthik feat. Sadhana Sargam - Manjakkaattu Maina paroles de chanson

paroles de chanson Manjakkaattu Maina - Sadhana Sargam , Karthik




மஞ்ச காட்டு மைனா
என்னக் கொஞ்சி கொஞ்சி போனா
மஞ்ச காட்டுக்குள்ளே
அவ காதல் சொல்லிப் போனா
காதல் கலவரம் பூக்கும்
அதை இரவினில் மேலும் தாக்கும்
பூக்கள் பொதுக்குழு கூட்டும்
நீ தலைமை தாங்க கேட்கும்
மஞ்ச காட்டு மைனா
உன்னக் கொஞ்சி கொஞ்சி போனா
மஞ்ச காட்டுக்குள்ளே
இவ காதல் சொல்லிப் போனா
கன்னியே காதலில் முத்தங்கள் முதலீடு
இரவெல்லாம் லாபமே இழப்புகள் கிடையாது
மாயனே மாயனே இது மன்மதக் கணக்கீடு
என் சுவாசம் என்னிடம் இல்லை
இது காதல் தேசத்தின் எல்லை
மஞ்ச காட்டு மைனா
என்னக் கொஞ்சி கொஞ்சி போனா
மஞ்ச காட்டுக்குள்ளே
அவ காதல் சொல்லிப் போனா
மஞ்ச காட்டு...
மஞ்ச காட்டு...
ஆடை இருந்தது பார்வை நுழைந்தது கண்களின் வெற்றியடி
இரவினில் அடிக்கடி உன்னால் நெருக்கடி இருளுக்கு வெற்றியடா
கட்டுக்கடங்கவில்லை நிலைமை தான்
கட்டில் முழுக்க இனி வன்முறை தான்
விட்டுகொடுத்து விடு ஒரு முறை தான்
கல்யாணம் என்பது வேண்டும்
மஞ்ச காட்டு ஏ...
மஞ்ச காட்டு ஏ...
மஞ்ச காட்டு மைனா
என்னக் கொஞ்சி கொஞ்சிப் போனா
இதயம் துடிக்குது படையும் எடுக்குது சடங்கை துவங்கிடவா
சேலையும் பறந்தது பதவியை இழந்தது இடையில் தேர்தல் தான்
கழுத்து வரைக்கும் வந்த கண்களுக்கு
வேகத் தடையும் ஒன்று இங்கிருக்கு
தடுத்து நிறுத்து என்ன விறுவிறுப்பு
பெண் நாணம் கொள்ளுது பாரு
மஞ்ச காட்டு
மஞ்ச காட்டு மைனா
என்ன கொஞ்சி கொஞ்சி போனா
மஞ்ச காட்டுக்குள்ளே
அவ காதல் சொல்லி போனா
காதல் கலவரம் பூக்கும்
அதை இரவினில் மேலும் தாக்கும்
பூக்கள் பொதுக்குழு கூட்டும்
நீ தலைமை தாங்க கேட்கும்
மஞ்ச காட்டு மைனா
உன்னக் கொஞ்சி கொஞ்சி போனா
மஞ்ச காட்டுக்குள்ளே
இவ காதல் சொல்லிப் போனா



Writer(s): Yuvan Shankar Raja



Attention! N'hésitez pas à laisser des commentaires.