Mano, Sujatha - Em Manasiley paroles de chanson

paroles de chanson Em Manasiley - Mano & Sujatha




எம் மனசுல அடி உன்ன நெனச்சதுனாலே
இன்று வரையில் வேற பெண்ண நெனைக்கல நானே
எம் மனசுல அட உன்ன நெனச்சதனாலே
வேற எதையும் இந்த நெஞ்சில் நெனைக்கல நானே
இந்த அழகு, என்றும் எனக்கு
இந்த உசிரு, என்றும் உனக்கு
ஒய் உன்னத் தவிர, சொந்தம் எனக்கு
உள்ளபடி உலகில் ஏதுமில்ல
எம் மனசுல அட உன்ன நெனச்சதனாலே (அஹஹா)
வேற எதையும் இந்த நெஞ்சில் நெனைக்கல நானே
காத்தையே கையில, கிள்ளி எடுப்போம்
நம்ம காதல பூமிக்கு சொல்லிக் கொடுப்போம் (ஹே-ஹே)
பூவுக்கு வாசத்த கத்துக் கொடுப்போம்
வெள்ளிமேகத்த பார்வையால் கட்டி இழுப்போம்
உன்னச் சுத்தும் இந்த மணம்
உன்னுடைய நந்தவனம்
நந்தவனச் செடியிலே, தேனெடுக்க வேணுமே
உன்னை எண்ணியே, கையில் அள்ளினால்
உப்புக்கல்லும் அமுதம் ஆகுமையா
ஏய், எம் மனசுல அடி உன்ன நெனச்சதனாலே
இன்று வரையில் வேற பெண்ண நெனைக்கல மானே
எம் மனசுல அட உன்ன நெனச்சதனாலே (அடடா)
வேற எதையும் இந்த நெஞ்சில் நெனைக்கல நானே
ஆண்டவன் தந்தது, இந்த பிறப்பு
என்னை ஆளவே வந்ததே உந்தன் வனப்பு
பார்த்திடும் பார்வையில், என்ன துடிப்பு
உன்னப் பார்த்ததும் பொங்குதே நெஞ்சில் இனிப்பு
ஹோ, கண்ணிருக்கும் காரணமே
கண்ணே உன்னைப் பார்த்திடவே
நெஞ்சிருக்கும் காரணமே
நித்தம் உன்னை நினைக்கவே
ஒ-ஒ-ஓ-ஒ, வாழும் வரைக்கும் சொந்தம் இனிக்கும்
வாழ்க்கை ஒரு வசந்தம் ஆகுமடி
எம் மனசுல அடி உன்ன நெனச்சதனாலே
இன்று வரையில் வேற பெண்ண நெனைக்கல மானே
எம் மனசுல அட உன்ன நெனச்சதனாலே (அஹ)
வேற எதையும் இந்த நெஞ்சில் நெனைக்கல நானே
இந்த அழகு, என்றும் எனக்கு
இந்த உசிரு, என்றும் உனக்கு
ஒ, உன்ன தவிர, சொந்தம் எனக்கு
உள்ளபடி உலகில் ஏதுமில்ல
எம் மனசுல அட உன்ன நெனச்சதனாலே (ஆஹஹா)
வேற எதையும் இந்த நெஞ்சில் நெனைக்கல நானே (ஹ)




Attention! N'hésitez pas à laisser des commentaires.