Harris Jayaraj feat. Naresh Iyer & Prashanthini - Mundhinam paroles de chanson

paroles de chanson Mundhinam - Harris Jayaraj , Naresh Iyer




Hi மாலினி, I am Krishnan
நான் இத சொல்லியே ஆகனும், நீ அவ்வளவு அழகு
இங்க எவனும் இவ்வளவு அழகா ஒரு-ப்ச்ச்-ஹ-ஹ
இவ்வளவு அழக பார்த்திருக்க மாட்டாங்க
And I am in love with you
முன் தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடை கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்
எங்கு தான் போனேனோ நாட்களும் வீணானதே
வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்பொழ்தே என்னோடு வந்தால் என்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றால் என்ன
இப்பொழ்தே என்னோடு வந்தால் என்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றால் என்ன
முன் தினம் பார்த்தேனே (பார்த்தேனே)
பார்த்ததும் தோற்றேனே (தோற்றேனே)
சல்லடை கண்ணாக (கண்ணாக)
நெஞ்சமும் புண்ணானதே (புண்ணானதே)
இத்தனை நாளாக (நாளாக)
உன்னை நான் பாராமல் (பாராமல்)
எங்கு தான் போனேனோ (போனேனோ)
நாட்களும் வீணானதே (வீணானதே)
காதலே
சுவாசமே
துலா தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாபாரம் தோற்காதோ பேரழகே
முகம் பார்த்து பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவேனோ ஆருயிரே
ஓ-நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
புகை போல படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி
முன் தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடை கண்ணாக உள்ளமும் புண்ணானதே
இத்தனை நாளாக (oh my love)
உன்னை நான் பாராமல் (yes my love)
எங்கு தான் போனேனோ நாட்களும் வீணானதே
கடல் நீலம் மங்கும் நேரம்
அலை வந்து தீண்டும் தூரம்
மனம் சென்று மூழ்காதோ ஈரத்திலே
தலை சாய்க்க தோளும் தந்தாய்
விரல் கோர்த்து பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே
பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
உயிர் ரெண்டும் உராய கண்டேன் நெருங்காமலே
உனையன்றி எனக்கு ஏது எதிர்காலமே
முன் தினம் பார்த்தேனே (பார்த்தேனே)
பார்த்ததும் தோற்றேனே (தோற்றேனே)
சல்லடை கண்ணாக (கண்ணாக)
நெஞ்சமும் புண்ணானதே (புண்ணானதே)
இத்தனை நாளாக (நாளாக)
உன்னை நான் பாராமல் (பாராமல்)
எங்கு தான் போனேனோ (போனேனோ)
நாட்களும் வீணானதே (வீணானதே)
வானத்தில் நீ வெண்ணிலா (நீ வெண்ணிலா)
ஏக்கத்தில் நான் தேய்வதா (நான் தேய்வதா)
இப்பொழ்தே என்னோடு வந்தால் என்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றால் என்ன
இப்பொழ்தே என்னோடு வந்தால் என்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றால் என்ன
வெண்ணிலா
வெண்ணிலா
வெண்ணிலா



Writer(s): Subramanian Thamarai, Harris Jayraj



Attention! N'hésitez pas à laisser des commentaires.