P. B. Sreenivas feat. S. Janaki - Podhigaimalai paroles de chanson

paroles de chanson Podhigaimalai - P. B. Sreenivas feat. S. Janaki




பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
பதி மதுரை வீதியிலே வளம் வரும் தென்றல்
பதி மதுரை வீதியிலே வளம் வரும் தென்றல்
இந்த பாண்டியனார் பைங்கிளியை தீண்டிடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
கார் குழலை நீராட்டி கண் இரண்டைதாலாட்டி
கார் குழலை நீராட்டி கண் இரண்டைதாலாட்டி
தேனிதழில் முத்தமிட்டு சிரித்திடும் தென்றல்
வண்ண தேகமெங்கும் நீரெடுத்து
தெளித்திடும் தென்றல்
தேகமெங்கும் நீரெடுத்து தெளித்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
கட்டிலிலே சேர்ந்திருக்கும் காதலர்கள் மேனியிலே
கட்டிலிலே சேர்ந்திருக்கும் காதலர்கள் மேனியிலே
வட்டமிட்டு பாதை தேடி மயங்கிடும் தென்றல்
போக வழியில்லாமல் வந்த வழி சுழன்றிடும் தென்றல்
வழியில்லாமல் வந்த வழி சுழன்றிடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
வான் பறக்கும் கொடியினிலே மீன் பறக்கும் மதுரையிலே
வான் பறக்கும் கொடியினிலே மீன் பறக்கும் மதுரையிலே
தான் பறந்து ஆட்சி செய்யும்
தளிர் மணி தென்றல்
அது வான் பிறந்த போது வந்த வாலிப தென்றல்
வான் பிறந்த போது வந்த வாலிப தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியிலும்
தவழ்ந்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
கன்னியர்கள் மேனியிலே கலந்து வரும் வேளையிலும்
கன்னியர்கள் மேனியிலே கலந்து வரும் வேளையிலும்
தன்னுடலை காட்டாத தந்திர தென்றல்
ஆளும் தென்னவர்க்கும் அஞ்சாத சாகச தென்றல்
தென்னவர்க்கும் அஞ்சாத சாகச தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியிலும்
தவழ்ந்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
அன்பு கிருஷ்ணா




Attention! N'hésitez pas à laisser des commentaires.