P. Susheela feat. Sheela - Gangaikarai Thottam (with Dialogues) paroles de chanson
P. Susheela feat. Sheela Gangaikarai Thottam (with Dialogues)

Gangaikarai Thottam (with Dialogues)

P. Susheela , Sheela


paroles de chanson Gangaikarai Thottam (with Dialogues) - P. Susheela , Sheela




கங்கைக் கரைத் தோட்டம்
கன்னிப் பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே
ஓ. ஓ. கண்ணன் நடுவினிலே
காலை இளங்காற்று
பாடிவரும் பாட்டு
எதிலும் அவன் குரலே
ஓ. ஓ. எதிலும் அவன் குரலே
ஆ... ஆ... ஆ...
கங்கைக் கரைத் தோட்டம்
கன்னிப் பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே
ஓ. ஓ. கண்ணன் நடுவினிலே
காலை இளங்காற்று
பாடிவரும் பாட்டு
எதிலும் அவன் குரலே
ஓ. ஓ. எதிலும் அவன் குரலே
கண்ணன் முகத்தோட்டம் கண்டேன்
கண்டவுடன் மாற்றம் கொண்டேன்
கண்ணன் முகத்தோட்டம் கண்டேன்
கண்டவுடன் மாற்றம் கொண்டேன்
கண்மயங்கி ஏங்கி நின்றேன்
கன்னி சிலையாகி நின்றேன்
கண்மயங்கி ஏங்கி நின்றேன்
கன்னி சிலையாகி நின்றேன்
என்ன நினைந்தேனோ? தன்னை மறந்தேனோ.
கண்ணீர் பெருகியதே.
ஓ. ஓ. கண்ணீர் பெருகியதே.
கங்கைக் கரைத் தோட்டம்
கன்னிப் பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே
ஓ. ஓ. கண்ணன் நடுவினிலே
கண்ணன் என்னை கண்டு கொண்டான்
கையிரண்டில் அள்ளிக்கொண்டான்
கண்ணன் என்னை கண்டு கொண்டான்
கையிரண்டில் அள்ளிக்கொண்டான்
பொன்னழகு மேனி என்றான்
பூச்சரங்கள் கோடி தந்தான்
பொன்னழகு மேனி என்றான்
பூச்சரங்கள் கோடி தந்தான்
கண் திறந்து பார்த்தேன் கண்ணன் அங்கு இல்லை
கண்ணீர் பெருகியதே.
ஓ. ஓ. கண்ணீர் பெருகியதே.
அன்று வந்த கண்ணன்
இன்று வரவில்லை
என்றோ அவன் வருவான்.
ஓ. ஓ. என்றோ அவன் வருவான்.
கண்ணன் முகம் கண்ட கண்கள்
மன்னர் முகம் காண்பதில்லை
கண்ணன் முகம் கண்ட கண்கள்
மன்னர் முகம் காண்பதில்லை
கண்ணனுக்குத் தந்த உள்ளம்
இன்னொருவர் கொள்வதில்லை
கண்ணனுக்குத் தந்த உள்ளம்
இன்னொருவர் கொள்வதில்லை
கண்ணன் வரும் நாளில் கன்னி இருப்பேனோ...
காற்றில் மறைவேனோ
ஓ. ஓ. காற்றில் மறைவேனோ
நாடி வரும் கண்ணன் கோலமணி மார்பில்
நானே தவழ்ந்திருப்பேன்
ஓ. ஓ... நானே தவழ்ந்திருப்பேன்
கண்ணா. ஆ. ஆ... ஆ...
கண்ணா. ஆ. ஆ... ஆ...
கண்ணா. ஆ. ஆ... ஆ...
கங்கைக் கரைத் தோட்டம்
கன்னிப் பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே
ஓ. ஓ. கண்ணன் நடுவினிலே
தமிழ் கிறுக்கன்
share



Writer(s): Kannadhasan, K V Mahadevan



Attention! N'hésitez pas à laisser des commentaires.