Harris Jayaraj feat. Unnikrishnan & Harini - Mazhai Mazhai paroles de chanson

paroles de chanson Mazhai Mazhai - Harris Jayaraj , Unnikrishnan , Harini



யார் வந்தது யார் வந்தது உன் நெஞ்சிலே யார் வந்தது
போர் வந்தது போர் வந்தது உள் நெஞ்சிலே போர் வந்தது
பூ வந்தது பூ வந்தது கை வீசிடும் பூ வந்தது
தீ வந்தது தீ வந்தது பூ கண்களில் தீ வந்தது
ஏன் வந்தது ஏன் வந்தது கண்ணோரமாய் வெப்பம் வெப்பம்
பெண் வந்ததும் பெண் வந்ததும் உன் சூழலில் சத்தம் சத்தம்
மழை மழை என் உலகத்தில் வருகின்ற
முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை நீ முதல் அலை
என்ன திண்மை என்ன வன்மை
எந்த பெண்ணும் அதிசய விண்கலம்
போக போக புரிகின்ற போர்களம்
ஒன்று செய் இப்போதே உள் நெஞ்சை உடைய செய்
மழை மழை என் உலகத்தில் வருகின்ற
முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை நீ முதல் அலை
எந்தன் மேனி உனக்கொரு தேன் குளம்
நீந்த நீந்த நிறைகின்ற நீர் வளம்
ஒன்று செய் இப்போதே உள் நெஞ்சை உடைய செய்
யார் வந்தது யார் வந்தது உன் நெஞ்சிலே யார் வந்தது
போர் வந்தது போர் வந்தது உள் நெஞ்சிலே போர் வந்தது
பூ வந்தது பூ வந்தது கை வீசிடும் பூ வந்தது
தீ வந்தது தீ வந்தது பூ கண்களில் தீ வந்தது
ஏன் வந்தது ஏன் வந்தது கண்ணோரமாய் வெப்பம் வெப்பம்
பெண் வந்ததும் பெண் வந்ததும் உன் சூழலில் சத்தம் சத்தம்
நீ மட்டும் ம் என்றால் உடலோடு உடல் மாற்றம் செய்வேனே
நீ மட்டும் போ என்றால் அப்போதே உயிர் விட்டு செல்வேனே
அடி பருவ பெண்ணே நீயும் ஒரு பங்கு சந்தை போலே
சில ஏற்ற இறக்கங்கள் அட உந்தன் மேனி மேலே
பூவின் உள்ளே ஒரே தாகம் உன் உதடுகள் தான்
மழை மழை என் உலகத்தில் வருகின்ற
முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை என் முதல் அலை
தீண்டாமல் சருகாவேன் நீ வந்து தொட்டால் நான் சிறகாவேன்
ஐயோடி நான் கல்லாவேன் உளியாக நீ வந்தால் கலையாவேன்
ஹே நீயும் ஓடி வந்து என்னை தீண்ட தீண்ட பாரு
ஒரு பாதரசம் போல நான் நழுவி செல்வேன் தேடு
ஏதோ ஏதோ வலி எந்தன் ஐம்புலங்களில் ஏன்?
மழை மழை என் உலகத்தில் வருகின்ற
முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை நீ முதல் அலை
எந்த பெண்ணும் அதிசய விண்கலம்
போக போக புரிகின்ற போர்க்களம்
ஒன்று செய் இப்போதே உள் நெஞ்சை உடைய செய்



Writer(s): Vairamuthu, Harris Jayaraj


Harris Jayaraj feat. Unnikrishnan & Harini - Ullam Ketkume
Album Ullam Ketkume
date de sortie
30-07-2020



Attention! N'hésitez pas à laisser des commentaires.