Sirkazhi Govindarajan - Kaalai Ilangathir paroles de chanson

paroles de chanson Kaalai Ilangathir - Sirkazhi Govindarajan




காலை இளம் கதிரில் உந்தன்
காட்சி தெரியுது
கடல் அலையில் மயில்
எழுந்து நடனம் புரியுது -முருகா
காலை இளம் கதிரில் உந்தன்
காட்சி தெரியுது - நீல
கடல் அலையில் மயில்
எழுந்து நடனம் புரியுது
கலையாதது நிலையாகுது கதியாகுது
காலை இளம் கதிரில் உந்தன்
காட்சி தெரியுது
மாலை வெயில் மஞ்சளிலே
உன் மேனி மின்னுது -அந்த
கோலம் கண்டு உள்ளம் கொள்ளை உறுதி கொள்ளுது
மாலை வெயில் மஞ்சளிலே
உன் மேனி மின்னுது -அந்த
கோலம் கண்டு உள்ளம் கொள்ளை உறுதி கொள்ளுது
குமரா உனை மனம் நாடுது
! கூத்தாடுது! முருகா
காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது
கடல் அலையில் மயில்
எழுந்து நடனம் புரியுது -முருகா
காலை இளம் கதிரில் உந்தன்
காட்சி தெரியுது
சோலை மலர் கூட்டம் உந்தன்
தோற்றம் கொள்ளுது -சிவ
சுப்ரமண்யம் சுப்ரமண்யம் என்று சொல்லுது
சோலை மலர் கூட்டம் உந்தன்
தோற்றம் கொள்ளுது -சிவ
சுப்ரமண்யம் சுப்ரமண்யம் என்று சொல்லுது
சுகம் ஆகுது! குக நாமமே!
சொல் ஆகுது! முருகா
காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது
கடல் அலையில் மயில்
எழுந்து நடனம் புரியுது -முருகா
காலை இளம் கதிரில் உந்தன்
காட்சி தெரியுது
வேலை ஏந்தும் வீரம் வெற்பு சிகரம் ஆகுது
வெற்றிவேல் சக்திவேலா என்றே சேவல் கூவுது
சக்திவேல் சக்திவேல் என்றே சேவல் கூவுது
சக்திவேல்வேல் சக்திவேல்வேல்
என்றே சேவல் கூவுது
வேலை ஏந்தும் வீரம் வெற்பு சிகரம் ஆகுது
வெற்றிவேல் சக்திவேலா என்றே சேவல் கூவுது
வினை ஓடுது! வடிவேல்
அது! துணையாகுது! ஆகுது
காலை இளம் கதிரில் உந்தன்
காட்சி தெரியுது- நீல
கடல் அலையில் மயில்
எழுந்து நடனம் புரியுது -முருகா
காலை இளம் கதிரில் உந்தன்
காட்சி தெரியுது
பார்க்கின்ற காட்சியெல்லாம் நீயாகவே
நான் பாடுகின்ற பாட்டெல்லாம்
முருகா முருகா...
பாடுகின்ற பாட்டெல்லாம் நினக்காகவே முருகா
பார்க்கின்ற காட்சியெல்லாம் நீயாகவே
நான் பாடுகின்ற பாட்டெல்லாம் நினக்காகவே
உருவாகுது திருவாகுது
குருநாதனே முருகா
காலை இளம் கதிரில் உந்தன்
காட்சி தெரியுது- நீல
கடல் அலையில் மயில்
எழுந்து நடனம் புரியுது
கலையாதது நிலையாகுது கதியாகுது
காலை இளம் கதிரில் உந்தன்
காட்சி தெரியுது- நீல
கடல் அலையில் மயில்
எழுந்து நடனம் புரியுது
குருநாதனே முருகா
குருநாதனே முருகா
குருநாதனே முருகா
குருநாதனே முருகா



Writer(s): Dr Seerkazhi Govindarajan


Attention! N'hésitez pas à laisser des commentaires.