Unnikrishnan feat. Jayasree - Narumugaiyeh Narumugaiyeh paroles de chanson

paroles de chanson Narumugaiyeh Narumugaiyeh - Jayasree , Unnikrashan

நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீ ஒரு திரு மொழி சொல்லாய்
அற்றை திங்கள் அன்னிலவில்
நெற்றி தரள நீர் வடிய
கொற்ற பொய்கள் ஆடியவள் நீயா
அற்றை திங்கள் அன்னிலவில்
நெற்றி தரள நீர் வடிய
கொற்ற பொய்கள் ஆடியவள் நீயா
திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகை பாராய்
வெண்ணிற புரவியில் வந்தவனே வேல் விழி மொழிகள் கேளாய்
அற்றை திங்கள் அன்னிலவில்
கொற்ற பொய்கை ஆடுகையில்
ஒற்றை பார்வைப் பார்த்தவனும் நீயா
அற்றை திங்கள் அன்னிலவில்
கொற்ற பொய்கை ஆடுகையில்
ஒற்றை பார்வைப் பார்த்தவனும் நீயா
மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன
மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன
பாண்டி நாடனை கண்ட என் உடல் பசலை கொண்டதென்ன
நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும்
நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும்
இளைத்தேன் துடித்தேன் பொறுக்க வில்லை
இடையில் மேகலை இருக்கவில்லை
நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீ ஒரு திரு மொழி சொல்லாய்
அற்றை திங்கள் அன்னிலவில்
கொற்ற பொய்கள் ஆடுகையில்
ஒற்றை பார்வைப் பார்த்தவனும் நீயா
அற்றை திங்கள் அன்னிலவில்
நெற்றி தரள நீர் வடிய
கொற்ற பொய்கை ஆடியவள் நீயா
யாயும் யாயும் யாராகியரோ நெஞ்சு நேர்ந்ததென்ன
யாயும் யாயும் யாராகியரோ நெஞ்சு நேர்ந்ததென்ன
யானும் நீயும் எவ்வழி அறிதும் உறவு சேர்ந்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர் கொடி பூத்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர் கொடி பூத்ததென்ன
செம்புலம் சேர்ந்த நீர் துளி போல்
அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன
திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகை பாராய்
வெண்ணிற புரவியில் வந்தவனே வேல் விழி மொழிகள் கேளாய்
அற்றை திங்கள் அன்னிலவில்
கொற்ற பொய்கை ஆடுகையில்
ஒற்றை பார்வை பார்த்தவன்னும் நீயா
அற்றை திங்கள் அன்னிலவில்
நெற்றி தரள நீர் வடிய
கொற்ற பொய்கை ஆடியவள் நீயா
நீயா
நீயா
நீயா

Attention! N'hésitez pas à laisser des commentaires.