Vairamuthu - Tholkaappiyar paroles de chanson

paroles de chanson Tholkaappiyar - Vairamuthu



தொல்காப்பியர்
மொழி ஓர் உயிரி
ஒளியே அதன் உயிர்
எழுத்தே அதன் உடல்
அது தன்னை பேசும் மனிதர்களை இயக்குகிறது
அவர்களால் இயக்கவும் பெறுகிறது
இறந்த காலத்தை சுமந்து
கொண்டு நிகழ்காலத்தில் இயங்கிக் கொண்டு
எதிர்காலத்தின் பெருவெளியில் பயணிக்கிறது
ஓர் உயிரி சந்திக்கும் நல்வினைகளையும் ஒரு மொழி
எல்லா காலங்களிலும் எதிர்கொள்கிறது
காலத்திருப்பங்களில் சில
மொழிகள் கவிழ்ந்து
விடுகின்றன
வளைவுகளில் சில மொழிகள்
தடம் புரள்கின்றன
தம்மை கடந்தேகும் ஒரு சாலை பயணிகளின் உரசலால் சில
மொழிகள் விபத்துக்கு உள்ளாகி விழுகின்றன
வளர்ச்சிதை மாற்றத்திற்கு
உள்ளாகாத சில மொழிகள் முதுமையுற்று மாய்கின்றன
அந்நிய கிருமிகள் புகுந்து சில மொழிகள் நோயுற்று அழுகின்றன
காலங்காலமாய் தம்மை
பேணி வந்த இனத்தின் கடைசி மனிதனோடு சில மொழிகள் கழிகின்றன
பண்பாட்டு
படையெடுப்புகளாலும்
அதிகாரத் தாக்குதல்களாலும்
சில மொழிகள்
கொல்லப்படுகின்றன
வேறு சில மொழிகளோ
காயங்களின் கட்டில்களில்
உயிரின் இறுதி இழையில் ஊசலாடுகின்றன
சில மொழிகள் யுகங்களின்
சந்திப்பில் ஏகும் வழி
எதுவென்று தெரியாமல்
நின்ற இடத்தில் நின்று
பின் தங்கி விடுகின்றன
வேறு சில மொழிகளோ தவறான பாதையில் பயணித்து தத்தளிக்கின்றன
லத்தீன் சமஸ்கிருதம் ஈப்ரூ
போன்ற மூத்த
மொழிகளெல்லாம்
மேற்சொன்ன இவற்றுள்
ஏதோ ஒன்றிலோ
கண்டறியப்படாத ஒரு காரணத்தினாலோ உலக
வழக்கு ஒழிந்து போயின
ஆனால் மேற்சொன்ன
அத்தனை காரணங்களையும் வெவ்வேறு காலகட்டங்களில் எதிர்கொண்டு இன்னும்
உயிரோடு விளங்குவதும்
உயிர்போடு துளங்குவதும்
தமிழ் மொழி என்ற
பேர் உயிரி மட்டும் தான்
வாழ்வோடு
படைப்பிலக்கியங்களையும் படைப்பியக்கியங்களோடு
வாழ்வையும் தமிழர்கள்
இடையராது பேணி
வந்ததே அது
உயிர்த்திருப்பதற்கு
முதற்க் காரணம்
இலக்கணம் என்ற
அறிவியல் மீது அது
திட்டமிட்டு கட்டப்பட்டிருப்பது
இரண்டாம் காரணம்
ஆரிய வரவினால் தமிழுக்கு
நேர விருந்த பெரும் பின்னடைவிலிருந்து
தமிழை கட்டிக் காத்த
காப்பு நூல் என்றே
தொல்காப்பியத்தை கருத
வேண்டும்
தொல் +(கூட்டல்) காப்பு
+(கூட்டல்) இயம்
தொல்காப்பியம்
தொல் மரபுகளை
காப்பதற்கே இயன்றப்
பெற்ற என்று கொள்வது
ஒருபோதும் உண்மைக்கு
புறம்பாகாது
தொல்காப்பியத்தின்
உண்மை குறித்து அறிவு
உலகத்தில் கருத்து வேறுபாடு
உண்டு
தொல்காப்பியத்தின் காலம்
கிமு ஐயாயிரத்து முன்னூற்று
இருபது என்பார்
வெள்ளை வாரனார்
கிமு இரண்டாயிரம் என்பார்
புலவர் குழந்தை
கிமு ஆயிரத்து இருநூறு என்பார் கா.சுப்பிரமணிய பிள்ளை
கிமு ஆயிரம் என்பார் மூவா
கிமு எழுநூறு என்பார்
இலக்குவனார்
கிமு இருநூறு என்பர்
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்,
மூ ராகவ ஐயங்கார் இருவரும்
கிபி நானூறு என்பார்
வழக்கம்போல் வையாபுரி பிள்ளை
தொல்காப்பியத்தின்
காலம் குறித்து கருத்து
வேறுபாடு இருப்பினும்
அது தமிழுக்கு நல்ல
காலம் என்பதில் அறிஞர்களுக்கிடையில்
கருத்து வேறுபாடு நிலவ வாய்ப்பில்லை
மூன்று தமிழ்
சங்கங்களை மூன்று
கடற்கோள்கள்
அழித்திருக்கின்றன
என்பது ஆய்வுலக
நம்பிக்கை
முதற்கடர் கோல்
கிமு இரண்டாயிரத்து
முன்னூற்று எம்பத்து
ஏழில் நிகழ்ந்ததென்பதும்
இரண்டாம் கடற்கோள்
கிமு ஐந்நூற்று நான்கில் நடந்ததென்பதும் மூன்றாம்
கடற்கோள் கிமு முந்நூற்று
ஆறில் நேர்ந்ததென்பதும் அனுமானத்தால் பெற்ற
ஆய்வாகும் அல்லது
ஆய்வில் பெற்ற
அனுமானமாகும்
இடைச்சங்கத்தார்க்கும் கடைச்சங்கதார்க்கும்
நூலாயிற்று
தொல்காப்பியம் என்பது
இறையனார்
கழவியல் ஆசிரியர்
கூற்றாதலின்
முதற்கடக் கடற்கோளுக்குப்
பிறகு பிறந்தது
தொல்காப்பியம்
என்பது உறுதி
முதற்கடர் கோளில்
தமிழரின் பெரிய
நிலப்பரப்பும் அரிய
நூல்களும் ஆழிவாய்
பட்டழிய
மிஞ்சிய நிலத்தோடும்
நூல்களோடும் தமிழினம்
ஊனப்பட்டு நிற்க
அந்த இடைவெளியில்
ஆரிய மொழியும்
பண்பாடும் தமிழர்
மீது தாக்குறவு
நிகழ்த்த தரைப்பட்டன
அந்தக் கடுங்காலத்தில்
தமிழின் இலக்கணத்தையும்
தமிழரின் வாழ்வியலையும் பெருமிதத்தோடு தூக்கி
நிறுத்திய பேரறிவாளன் தொல்காப்பியன்
அந்தத் தொல்காப்பியன்
வகுத்துக் கொடுத்த
ஒளி கோடுகளின்
வழியே தான் இன்று
வரைக்கும் ஆன
மொழிக் கொள்கை
தடுமாறாமலும் தடம்
மாறாமலும்
நடை போடுகிறது என்று இருபத்தோராம்
நூற்றாண்டு தமிழினம்
எழுந்து சொல்லலாம்
இன்று வரை கிட்டிய
எழுத்து ஆதாரங்களுள்
தமிழினத்தின் ஆதி
அறிவு என்று
தொல்காப்பியத்தையே
சுட்டலாம்
தொல்காப்பியம் குறித்து
ஆண்டாண்டு காலமாய்
நீண்ட நிலவுகிற
ஒரு வினாவிற்கு
விடை சொல்லி
கடக்கவே இக்கட்டுரை
கருதுகிறது
தொல்காப்பியம்
முதநூலா வடமொழி
சார்புற்ற வழி நூலா?
என்பதே வினா
தொல்காப்பியரின்
ஒரு சாலை
மாணாக்கர் என்று
கருதப்பெரும்
பழம்பாரனார் பாடி
கொடுத்த பாயிரத்தில்
காணப்பெறும் ஒரு
சொல்லாட்சியே இந்த
வினாவை
விதைத்திருப்பதாய்
ஒரு சாரார் கருதுகிறார்கள்
"ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன்
எனத் தன்பெயர்
தோற்றி" என்ற
தொடரில் துலங்கும்
"ஐந்திரம்" என்ற
சொல் ஐந்திர
வியாகரணமாகிய
வடநூலை
குறிக்கிறதென்றும்
தொல்காப்பியம்
அதனுடைய வழிநூல்
என்றும் சிலர் கருதுவர்
ஐந்திரம் என்பதை
ஐந்திரியாகரணம்
என்று எழுதிச் சென்ற
அடியார்க்கு நல்லாரை
அவர்கள் சான்று
காட்டுவதும் உண்டு
இங்கிருந்து தான் நம்
பொறுப்பு மிக்க மறுப்பு
வாதம் உயிர்ப்புருகிறது
முதலில் ஐந்திரம்
என்பது ஓர் இலக்கண
நூல் அன்று
அது ஐந்திரம்,
ஆக்கினேயம்,
கணாதிபத்தியம்,
சைவம், வைணவம்,
சாக்கியம் என்ற அறுவகை சமயங்களுள் ஒன்று
ஒரு சமய நூல் எப்படி
இலக்கணத்திற்கு
முதநூலாகும்?
இன்னொன்று
தொல்காப்பியம்
நிலவிய காலத்தில்
ஐந்திரம் உளவியதாக
சான்றொன்றும் கிட்டிலது
அதே பழம்பாரனாரின்
பாயிரம் "செந்தமிழ்
இயற்கை சிவனிய
நிலத்தொடு முந்து
நூல் கண்டு முறைப்பட
எண்ணி" என்று பாடி
இருப்பதால் தமிழக
எல்லைகளுக்கு உட்பட்ட
முந்து நூல்களே
தொல்காப்பியத்தின்
மூல நூல்கள் என்பது
முழு உண்மையாகும்
ஐந்திரம் என்ற
சொல்லின் மீதே
சிலருக்கு ஐயம்
எழுகிறது
அது ஐந் திறம் என்றே குறிக்கப்பட்டிருத்தல்
வேண்டும் என்று
கருதுவாரை
கழித்தேகவயலாது
எழுத்து சொல்
பொருள் யாப்பு
அணி என்ற ஐந்து
திறன்களையும்
ஆய்ந்து வழங்கியதால்
அது வல்லினம்
பெய்தே
வழங்கப்பட்டிருத்தல்
கூடும்
இடைக்கால தானே
தொல்காப்பியம் பேசுகிறது
மற்றிரு இலக்கணங்கள் இல்லாமையால்
இதனை ஐந்திறம்
என்பது எங்கனம்
பொருந்தும்?
என்று கேட்பார்க்கு தி.கோ.சூரியநாராயண
சாத்திரியார் என்னும்
பரிதிமாற் கலைஞரின்
கட்டுரை விடை
இருக்கிறது
ஐவகை
இலக்கணங்களாவண
எழுத்து சொல்
பொருள் யாப்பு
அணி என்பன
இவை ஐந்தனுள்ளே தொல்காப்பியத்தில்
முதல் மூன்றை சில
இயல்களில்
விரித்துக் கூறுவர்
செய்யுளியல் என்றதன்
கண்ணே யாப்பை
விரித்தோதியும்
உவமவியல் என்றதன்
கண்ணே அணியை
எடுத்தோதியும்
ஓராற்றால் ஐவகை
இலக்கணமும்
கோரலாயினர்
இது தீ.கோ.
சூரிய நாராயண
சாத்திரியார்
தயிரும்
வெண்ணையும்
பாலுக்குள் நிறைந்து
இருப்பது போல்
யாப்பும் அணியும் தொல்காப்பியத்துக்குள் தோய்ந்துறைகின்றன
ஆகவே தொல்காப்பியம்
முதநூல் தான்
மூத்த தமிழ் குடியின்
மூளைச்சாறு தான்
தமிழினத்தின்
ஐய்யந்தறிவற்ற
ஆதி அறிவு தான்
எழுத்து சொல்
பொருள் என்ற மூன்று அதிகாரங்களையும்
ஓர் அதிகாரத்திற்கு
ஒன்பது வீதம்
இருபத்து ஏழு
இயல்களையும்
இளம்பூரணர்
கணக்குப்படி ஆயிரத்து
ஐந்நூற்று
தொன்னூற்று ஐந்து
நூற்பாக்களையும்
நச்சுனார் கினியர்
பேராசிரியர் கணக்குப்படி
ஆயிரத்து அறுநூற்று
பதினொன்று
நூற்பாக்களையும்
உறுப்புகளாக உடையது தொல்காப்பியம்
மூன்று அதிகாரங்களில்
எழுத்தையே
தொல்காப்பியம்
முன்வைக்கிறது
மொழி என்பது
மனிதர்க்கு மட்டுமே
உரியதென்று
உறுதிப்படுத்தலியலாது
ஒலியே மொழி
என்பதனால் ஒலி
குறிப்புடைய பறவை
விலங்கு பூச்சி
இனங்களுக்கும் குழு
குறிப்போல் ஒரு
மொழி வழங்கி
வரல் கூடும்
ஆகையால் மொழி
எல்லா
உயிரினங்களுக்கும்
உரியது எழுத்தோ
மனித குலத்துக்கு
மட்டுமே உரியது
ஒளிப்பதிவு கண்டறியாத
காலம் வரைக்கும்
பேச்சு மொழி என்பது
தம்மை முன்னிலைக்கு
மட்டுமே உரியது
ஆனால் எழுத்து என்பதோ முக்காலத்துக்கும்
தம்மை முன்னிலை படர்க்கைக்குமானது
எழுத்து என்பது
ஒளியை ஊற்றி
வைக்கும் கொள்கலன்
அது அறிவின்
சேமிப்புக் கிடங்குதலைமுறைக்கான
ஞானத்தை கடத்தி
ஏகும் கருவி
மொழியின்
எழுத்துக்களைப்
பகுப்பதென்பதே ஒரு
கணிதம்
மற்றும் அஃதோர்
ஒளி விஞ்ஞானம்
தொல்காப்பியர் ஓர்
ஒலி விஞ்ஞானி
தமிழ்
எழுத்திலக்கணத்தை
நுண் மரபு மொழி
மரபு பிறப்பியல்
புணரியல் தொகை
மரபு அறிவியல்
உயிர் மயங்கியல்
புள்ளி மயங்கியல்
குற்றியலுகரப்
புணரியல் என ஒன்பது
இயல்களில்
வகைப்படுத்துகிறார்
தொல்காப்பியர்
எழுத்தெனப் படுப
அகர முதல நகர
இறுவாய்
முப்பஃது என்ப
சார்ந்துவரல் மரபின்
மூன்றலங்- கடையே
என்று தமிழ் எழுத்துக்கள்
மொத்தம் முப்பத்து
மூன்று என்று
வரையறுக்கிறார்
அகரமுதல் நகர
இறாக உள்ள
முப்பதோடு
குற்றியலிகரம்
குற்றியலுகரம் ஆயுதம்
என்னும் மூன்றையும்
கூட்டி தமிழ் எழுத்துக்கள்
முப்பத்து மூன்று என்று முடிவு செய்கிறார்
தனித்து இயங்கவல்ல 12 எழுத்துக்களை
உயிர் எழுத்துக்கள்
என்றால் தனித்து
இயங்கவல்லாத
பதினெட்டு எழுத்துக்களை மெய்யெழுத்துக்கள்
என்றார்
உயிரைச் சார்ந்து
இயங்குவதே மெய்
என்ற பேரறிவை மொழியின்
மீது சாற்றிய முன்னோர்களின் மூதறிவை
கருதும்போதெல்லாம்
உள்ளம் களி கூறுகிறது
குற்றியலிகரம்
குற்றியலுகரம்
ஆயுதம் இம்மூன்றும்
ஒரு சொல்லைச்
சார்ந்தன்றி தனித்து
இயங்கும்
இயல்பற்றனவாதலின் சார்பெழுத்துக்கள்
எனப்பட்டன
எழுத்ததிகாரத்தின்
பெருமை பேச
பிறப்பியில் ஒன்றே
போதும் எழுத்துக்கள்
பிறப்பது எங்ஙணம்?
அவற்றின் பிறப்பிடம் யாது?
என்று சிந்தித்த
தொல்காப்பியர்
உடல் உயிர் காற்று
என்ற மூன்று
மூலங்களோடு முடிச்சு
போடுகிறார்
"உந்தி வழியா
முந்துவளி தோன்றித்
தலையினும் மிடற்றினும்
நெஞ்சினும் நிலைஇப்
பல்லும் இதழும் நாவும்
மூக்கும் அண்ணமும்
உளப்பட எண்முறை
நிலையான்
பிறப்பின் ஆக்கம் வேறு
வேறியல" என்பது
நுட்பமான நூற்பா
உந்தி வழியே முந்தி
எழுகின்ற காற்று
தலை மிடறு நெஞ்சு ஆகிய மூவிடங்களில் தவழ்ந்து
பல் உதடு நாக்கு
மூக்கு அண்ணம்
ஆகிய ஐவகை
உறுப்புகளோடு உரழ்ந்து
வெவ்வேறு உருவாய்
தோற்றுவதே
எழுத்துக்களின் பிறப்பு
முறையாகும்
என்று அறிவியல்
தளத்தில் நின்று அருதியிட்டு அறிவிக்கிறார்
மொழிக்கு முதல் எழுத்தாக வரக்கூடியவை எவை?
வாராதவை எவை?
என்று தொல்காப்பியர்
இட்டுக் கொடுத்த
சட்டம் தான் மூவாயிரம்
ஆண்டுகளாய் நின்று
நிலவுகிறது
உயிரெழுத்து பன்னிரெண்டும்
மொழி முதலாகும்
மெய்யெழுத்துக்கள் மொழி
முதலாகா
ப்ரியம் ஸ்திரீ த்வனி
ட்விட்டர் என்று
மெய்யெழுத்தோடு
ஒரு சொல் தொடங்கினால்
அது தமிழன்று என்ற
வரையறை இந்த
உலகமயமாதல்
யுகத்திலும் நின்று
நிலைத்திருக்கிறது
வடநாட்டு பண்பாட்டு
தாக்கத்தால் கிரந்த
எழுத்துக்கள் தமிழுக்குள் புகத்தலைப்பட்ட காலத்தில் தொலைநோக்குப்
பார்வையோடு
தொல்காப்பியர் செய்த
ஒரு நூற்பா தான்
இன்றுவரை தமிழின்
தனித்தன்மையை
காக்கிறது
அதுதான் அந்நிய மொழியை
வெளியே நிறுத்தி
தூய்மை உருத்தி
தமிழுக்குள் அனுப்புகிறது
காலப்போக்கில் கிரந்த
எழுத்துக்களின்
சொற்களை தவிர்க்க
முடியாது ஆனால்
அந்த கிரந்த எழுத்துக்களை தவிர்க்கலாம் என்று
முடிவெடுத்தான் அந்த
மொழி அறிஞன்
"வடசொர்கிளவி வடவெழுத்
தொரீஇ எழுத்தோடு புணர்ந்த சொல்லா கும்மே"
என்று ஓர் எழுத்தானையும்
நிறுவினார் தொல்காப்பியர்
அஃதாவது வட
சொற்களின் வட
எழுத்துக்களை தமிழ்
எழுத்துக்கள் ஆக்கி
தமிழோடு புழங்கலாம்
என்று இலக்கணச்சட்டம்
இயற்றினார்
பங்கஜம் பங்கயம்
ஆனதும்
லஷ்மன் இலக்குவன்
ஆனதும்
ஜானகி சானகி
ஆனதும்
ராஜராஜன் ராசராசன்
ஆனதும்
மஹாராஷ்டிரம் மராட்டியம்
ஆனதும்
ஹை கோர்ட் ஐகோர்ட்
என்று எழுதப்படுவதும்
ரஷ்யா உருசியா ஆனதும் தொல்காப்பியன் வகுத்த
மொழி மரபின்
தொடர்ச்சியாகும்
காலப்பெருவெளியில்
அரசர்களின் எத்துனையோ அதிகாரங்கள்
மாண்டழிந்து
போயின ஆனால்
தொல்காப்பியன்
இயற்றிய மூன்று
அதிகாரங்களும்
இன்றுவரை ஒரு
மொழியின் ஆட்சியை
செலுத்தி வருகின்றன
இந்தக் கட்டுரை எழுதப்படும் இரண்டாயிரத்து
பதினெட்டில்
இந்திய அரசமைப்பு
சட்டத்திற்கு அறுபத்தெட்டு
அகவை ஆகிறது
இந்த அறுபத்தெட்டு
ஆண்டுகளில் இந்திய
அரசமைப்புச் சட்டம்
நூற்று ஒரு முறை திருத்தப்பட்டிருக்கிறது
ஆனால் மூவாயிரம்
ஆண்டுகளுக்கு முன்
இயற்றப்பட்ட
தமிழ் மொழிச் சட்டம்
இன்றுவரை ஒரு
திருத்தத்திற்கும்
ஆளாகாமல்
உயிர்ப்போடு இயங்கி
வருகிறது
சட்டம் வகுத்த
தொல்காப்பியருக்கும்
அது பெருமை கட்டிக் காத்த தமிழருக்கும் அது பெருமை
வைப்பு முறையில் எழுத்து அதிகாரத்தை தொடர்கிறது சொல்லதிகாரம்
எழுத்துக்கு முன்பே
பிறந்தது சொல்
சொல்லை முன்னிலைப்படுத்தி பொருள் உண்டாவதில்லை
பொருளை
முன்னிலைப்படுத்தியே
சொல் உண்டாகிறது
பின்னர் அந்தப்
பொருளைச் சுட்டும்
சொல் தானும் ஒரு
பொருள் ஆகிறது
பொருளே சொல்லுக்கு
மூலம் என்பதனால் எல்லாச்
சொல்லும் பொருள்
குறித்தனவே என்று அறைந்து சொல்கிறது தொல்காப்பியம்
இன்னும் வாழ்ந்து
பார்த்தால் எந்த ஒளி
எழுத்துக்கள்
அடங்குகிறதோ
அதுவே சொல்லாகிறது
கடலோசை காற்றோசை
இடியோசை மழை
ஓசை பறவை
ஓசை விலங்கு
ஓசை ஆற்றோசை
அருவி ஓசை
இசைக்கருவிகளின்
இன்னோசை முத்தம்
சிரிப்பு முனகள் இருமல் இவையெல்லாம்
எழுத்துக்களில்
அடங்குவதில்லை
அதனால் இவை யாவும் ஒளி குறிப்புகள் ஆகுமேயன்றி
சொற்களாகா
எழுத்துக்குள் அடங்கும் ஒளியே சொல்லாகிறது
இந்தப் பேரண்டத்தை
அளக்கும் அத்தனை
சொற்களையும் இரண்டே
இரண்டு செப்புக்குள்
அடைக்கிறார் தொல்காப்பியர்
ஒன்று உயர்தினை
மற்றொன்று அஃற்றினை
மனிதர் உயர்திணை
மனிதக் கூட்டம்
அல்லாதவை எல்லாம்
அஃறிணை
இந்த உயர்திணையை
ஆண்பால் பெண்பால்
பலர்பால் என்ற
மூன்றுக்குள் அடக்கிய
தொல்காப்பியர்
அஃற்றிணையை
ஒன்றன்பால்
பலவின்பால் என்ற
இரண்டுக்குள் அடக்குகிறார்
இந்தச் சொற்பகுப்பை தமிழ் ஞானத்தின் உச்சம் என்றே கொண்டாடலாம்
இந்தோ ஐரோப்பிய
மொழிகள் பல உயிர்
உள்ளன உயிர் அல்லன அனைத்தையும்
உயர்திணையாகவே
கொண்டு
ஆண் பெண் இந்த
இரு பிரிவிற்குள்
அடக்கி விட்டன
சித்திய மொழி
குழுவினுள் பல
எல்லாவற்றையும்
அஃற்றினையாகவே
கொண்டு ஒன்று பல
என்ற இரு பிரிவிக்குள்
அடக்கி விட்டன
தமிழ் ஒன்றுதான்
பகுத்தறிவுக்கு மதிப்பு
கொடுத்து அதனை
உடைய மக்களை
உயர்திணை எனக்
கூறியுள்ளது
இன்று தமது
தொல்காப்பிய
ஆராய்ச்சியுல்
அறிஞர் சி
இலக்குவனார்
சுட்டுவது
அறிவுலகத்தின்
ஆழ்ந்த
பார்வைக்கு
உள்ளாகிறது
அந்த சொற்களை
பெயர் வினை
இடை உறி
என்று நான்காக
பகுத்தபோது
மொழியின் மொத்த
கட்டமைப்பும்
ஒரு முடிவுக்கு
வந்துவிட்டது
பொருளை
உணர்த்துவது
பெயர்ச்சொல்
அப்பொருளின்
தொழிலைச்
சொல்வது
வினைச்சொல்
பெயருக்கும்
வினைக்கும்
இடையே மையமாய்
இயங்குவது
இடைச்சொல்
பொருளின் பண்பு
கூறுவது
உரிச்சொல் என்ற
சிவஞான முனிவரின்
தெள்ளுரையும்
உள்வாங்கி
உணரத் தக்கது
சொல்லதிகாரத்தில்
சொல்லப்பட்ட கிளவியாக்கம் வேற்றுமையியல் வேற்றுமை மயங்கியல் விளிமரபு
பெயரியல் வினையியல்
இடையியல் உரியியல்
எச்சவியல் என்ற ஒன்பது இயல்களிலும்
சொல்லும் சொல் இயங்கும் அறிவியலும்
மொழியின் இயக்கத்தால்
பெறப்படும் விகாரங்களும்
விகாரங்களால் பெறப்படும்
புது வடிவங்களும்
தமிழ் மொழியின் ஒரு
சொல் இப்படித்தான்
இயங்கும் அல்லது
இயங்க வேண்டும்
என்ற ஒலி சட்டங்களும்
வரையறுத்து
வழங்கப்பட்டுள்ளன
தொல்காப்பியரின்
சொல்லதிகாரத்தை
இற்றை நாள் மொழியில்
சொல் அறிவியல் என்று
சொல்லலாம்
மூன்றாம் அதிகாரத்திற்கு
பொருள் அதிகாரம்
என்ற தலைப்பிட்ட
தொல்காப்பியரின்
சொற்றேர்வு சுட்டுகிறது
அவர் பெற்ற பேரறிவை
மனிதன்
பொருள்களால்
ஆக்கப்பட்டவன்
மற்றும் பொருள்களை
இயக்குகிறவன்
பொருள்களால்
இயக்கப்படுகிறவன்
பொருள்களை
கண்டறிகிறவன்
பொருள்களை
உண்டாக்குகிறவன்
இறுதியில் தானும்
ஒரு பொருளாகி
பின்னர் பொருள்
அற்ற பொருளாகி
காலப் பொருளுக்குள் மூலப்பொருளாய்
கலக்கிறவன்
அல்லது கரைகிறவன்
இந்த உலகப்
பொருள்கள் கட்படு
பொருள் என்றும்
கருது பொருள்
என்றும்
இருவகைப்படும்
அவற்றை மூவகை
படுத்தி முதற்பொருள்
கருப்பொருள்
உரிப்பொருள் என்று
பகுத்தறிவால்
பகுத்துப்பகுத்து
வகைப்படுத்துகிறார்
தொல்காப்பியர்
முதற்பொருள்
எதுவென்று
முன்மொழிந்தது
தொல்காப்பியரின்
மூளை பழம் பிழிந்த
சாராகும்
உயிர்த்தோற்றத்தின்
மூலமாகிய இந்த
நிலம் என்ற
உருவமும்
இந்த நிலவியல்
வாழ்வை
இயக்குகின்ற
காலம் என்ற
அருவமும்
முதற்பொருள் என்பது தொல்காப்பியரின்
அசைக்க முடியாத
அறிவின் ஆணையாகும்
"முதலெனப் படுவது
நிலம்பொழு திரண்டின்
இயல்பென மொழிப
இயல்புணர்ந் தோரே"
என்பது எங்கள்
முன்னோன் எழுதிய
முன்னறிவியல்
கடந்த நானூறு
ஆண்டுகளாய்
ஐரோப்பிய அமெரிக்க
அறிவியல் உலகமும்
ஐன்ஸ்டீன் முதலாக
ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்
இகராக விளங்கிய
விஞ்ஞானிகளும்
டைம் அண்ட் ஸ்பேஸ்
என்று தேடி கண்டறிந்த
திரவியத்தை மூவாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே நிலமும்
பொழுதுமே
முதற்பொருள் என்று
முன்மொழிந்த
தொல்காப்பியன்
முதல் அறிவியலுக்கு
வித்திட்டவர் ஆகிறார்
முதற் பொருள்களில்
கருக்கொள்வன
யெல்லாம்
கருப்பொருள்கள்
அந்தக்
கருப்பொருள்களின்
உழுகலாறுகள்
உரிப்பொருள்கள்
என்று
வகைப்படுத்தியதில்
மொத்த உலகத்தையும்
இந்த மூன்று
பகுப்புக்குள் அடக்கி
முடிக்கிறார்
அறிஞர் பெருமான்
அகத்திணையியல்
புறத்திணையியல்
களவியல் கற்பியல்
பொருளியல்
மெய்ப்பாட்டியல்
உவமவியல்
செய்யுளியல்
மரபியல் என்ற
பொருளதிகாரத்தின்
9 இயல்களிலும்
தமிழர்களின் காதலும்
வீரமும் நிலமும்
பொழுதும் வாழ்வும்
தொழிலும் உணவும்
உணர்வும் கலையும்
கல்வியும் வழக்கமும்
ஒழுக்கமும் உறவும்
பிரிவும் அறமும்
மரமும் மரமும்
மாற்றமும் யாப்பும்
அணியும் எல்லா
பொருளையும்
இலக்கணப்படுத்தி
இருக்கிறார்
தொல்காப்பிய
பேராசான்
தமிழுக்கென்றே
வாழ்க்கையை
கரைத்துக் கொண்ட
முன்னோடிகள் பலரும் தொல்காப்பியத்தை
எழுத்தெழுத்தாக
இடையிட்டு எழுதிப்
புவந்தனர்
இக்கட்டுரை
தொல்காப்பியத்தின்
தலைவாசலின்
ஒரு வரவேற்பு
கோலம் மட்டுமே
வருகிறது ஆனாலும் தொல்காப்பியத்தின்
பெரும் பெருமை
என்று முன்னோர்கள்
தொட்டு காட்டாத
ஒன்றையும் சுட்டிக்காட்ட
விழைகிறது
உலகத் தோற்றம்
குறித்து இதுவரை
இரண்டு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன
ஒன்று மதக்கருத்து
இன்னொன்று
அறிவியல் கருத்து
இந்த அண்டமே
கடவுளின் கைவினை
என்ற கருத்தையே
எல்லா மதங்களும்
எழுதி போகின்றன
பிரம்ம சொரூபியாக
நின்று
படைப்புச் செயலில்
விழைந்த
பரம்பொருளானவர்
முதலில் நீரை தான்
படைத்தார்
அந்த நீரில்
படைப்பின் முதல்
விதையையும்
ஊன்றினார்
அந்த விதையானது
ஓர் அண்டமாக
பரிணமித்தது
பிரம்ம இச்சையின்
படியே பொன்மயமான
அவ்வண்டம் இரு
கூறுகளாகப் பிளந்தது
அவற்றில் ஒன்றை
மேலே விண்ணுலக
ஆக்கி மற்றொன்றை
மண்ணுலகக்கி
கீழே அமைத்தார்
மனித ராசியை
உண்டாக்க வேண்டிய
செயர்க்கிறு தவம்
செய்து புனிதரான
பத்து பிரஜாபதிகளை
உண்டாக்கினார்
என்று அண்டத்
தோற்றத்தை
கட்டமைக்கிறது
மனு ஸ்மிருதி
"ஆதியிலே தேவன்
வானத்தையும்
பூமியையும்
சிருஷ்டித்தார்
பின் தேவன்
தம்முடைய சாயலாக
மனுஷனை
சிருஷ்டித்தார்
தேவன் தாம்
செய்த தம்முடைய
கிரியையை
நிறைவேற்றி
தாம் உண்டாக்கின
தம்முடைய
கிரியைகளை
எல்லாம் முடித்த
பின்பு
ஏழாம் நாளிலே
ஓய்ந்திருந்தார்"
என்று சொல்கிறது
விவிலியம்
பூமியை இரண்டு
நாட்களில் படைத்த
ஏக இறைவன்
அதன்
மேற்பகுதியில்
உறுதியான
மலைகளை
அமைத்தான் அதில்
வளங்களை
அருளினான்
அதற்கான
உணவுகளை
அளவோடு
நிர்ணயித்தான்
பின்னர் அவன்
வானத்தின் பக்கம்
கவனம்
செலுத்தினான்
இரண்டு நாட்களில்
அதை ஏழு
வானங்களாக
தீர்மானித்தான்
என்கிறது பைபிளுக்கு
ஐந்நூற்று ஐம்பத்து
ஏழு ஆண்டுகளுக்குப்
பின்பு பிறந்த
திருக்குர்ஆன்
ஆனால் கரிம
கொள்கை என்ற
ஒன்று இந்த பூமியின்
தோற்றம் குறித்து
புதுக்கருத்தை
முன் வைத்தது
பாறைகளின்
இடுக்கில் தங்கி
இருக்கும்
கரிமங்களின்
வயதை
கணக்கிடுவதன்
மூலம் பாறைகளின்
காலத்தை
கணக்கிட்ட
கரிமக்கொள்கை
பூமியின் வயதையும்
புலனாய்வு செய்தது
இந்த பூமி
நானூற்று
ஐம்பது கோடி
ஆண்டுகளுக்கு
முன்பு தோன்றியது
என்று துப்பறிந்தது
முன்னூற்று
ஐம்பது கோடி
ஆண்டுகளுக்கு
முன்பு தோன்றிய
நுண்ணுயிரிகளே
6 கோடி
ஆண்டுகளுக்கு
முன்பு வரை
இந்த பூமியை
ஆட்சி செய்தன
அதன் பின்பே
படிப்படியாக
உயிரினங்கள்
தோன்றின என்ற
டார்வின் கருத்தை
அறிவியல் அங்கீகரித்த
பிறகு உலக தோற்றம்
குறித்த புதுக் கொள்கை
உருவாயிற்று
மத வழிபட்ட
கருத்துக்களை
அறிவியல் மருதலித்தது
இப்படி பூமியின்
தோற்றம் குறித்து
மறுதலிக்கப்பட்ட
அனுமானங்களை
மதங்கள் உருவாக்கி
இருந்த போது
இன்றும்
ஏற்றுக்கொள்ளத்தக்க
முதற்கருத்தை
முன்னிறுத்தியவர்
தொல்காப்பியர்
நிலம் தீ நீர் வளி
விசும்பொடு ஐந்தும்
கலந்த மயக்கம்
உலகம்
என்று வரையறுக்கிறது தொல்காப்பியம்
நிலம் நீர் தீ வளி
விளி என்ற ஐந்தின்
கலவை தான்
இந்த மண் கோள்
என்று முரண்பாடு
இல்லாத கருத்தை
முன்மொழிகிறது
இந்த பூமி எப்படி
படைக்கப்பட்டது
என்ற மதம்சார்
கருத்தில் தோயாமல்
எதனால்
படைக்கப்பட்டது
என்ற மேன்மையோடு
மட்டும் நின்று
கொண்டதால்
தொல்காப்பியத்தை
எந்த நூற்றாண்டு
அறிவியலும் இடறித்
தள்ள இயலாது
தொல்காப்பியர்
எந்த மதத்துக்குள்ளும்
தன்னை இணைத்துக் கொள்ளவில்லை
ஏனென்றால்
தொல்காப்பியர்
காலத்தில் வழிபாடு
இருந்தது மதம் இல்லை
தெய்வம் இருந்தது
கடவுள் இல்லை
ஐவகை நிலம்
காக்க தங்களை
களப்பலியிட்டுக்
கொண்ட
முன்னோர்களுக்கு
நடு கல்லையே
தமிழர்கள் தெய்வம்
என்று போற்றி
வழிபட்டார்கள்
காட்சி கால்கோள்
நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு மரபில்
பெரும்படை
வாழ்த்தல் என்று
இருமூன்று மரபில்
கல்லொடு புணர
இன்னும்
தொல்காப்பியம்
நடுதல் வழிபாடு
தான் தமிழர்களின்
ஆதி வழிபாடு
என்று சான்றளிக்கிறது
அதுவே குலதெய்வ
வழிபாடு ஆகி
இன்று வரை
நாட்டார் சமயமாய்
விளங்குகிறது
தொல்காப்பியத்தை எப்படி மதிப்பிடுவது
மொழி இலக்கணக்
கோட்டுக்குள் இயங்கவும்
அதன் ஒளி தடம் புரளாமல் பயணிக்கவும்
தமிழன் ஆதி குடி
என்பதற்கு அடையாளம்
காட்டவும்
மொழிக்கு அறிவியலையும்
வாழ்விற்கு அறவியலையும்
அடிப்படையாகக் கொண்டது
தமிழ் பழங்குடி
என்பதற்கு சான்று
சொல்லவும்
தமிழர்க்கு உச்சமாகவும்
எச்சமாகவும் உள்ள
தொல்லாவணமே
தொல்காப்பியம் என்று
மதிப்பிடலாம்
தொல்காப்பியத்தை
கட்டி காப்பது
அரசாங்கத்தின்
அறிவுலகத்தின்
கடமை மட்டுமன்று
தமிழ் மொழி பேசும்
எழுதும் ஒவ்வொருவரின்
கடமையும் ஆகும்.



Writer(s): Vairamuthu


Vairamuthu - Thamizhaatrupadai
Album Thamizhaatrupadai
date de sortie
11-07-2019




Attention! N'hésitez pas à laisser des commentaires.