Yuvan Shankar Raja - Kadaloram paroles de chanson

paroles de chanson Kadaloram - Yuvan Shankar Raja




கடலோரம்
ஒரு ஊரு
ஒரு ஊரில்
ஒரு தோப்பு
ஒரு தோப்பில்
ஒரு பூவு
ஒரு பூவில்
ஒரு வண்டு
முதல் முதல் வண்டொன்று தீண்டியதும்
விரல் பட்ட பூ வியர்த்ததோ
தொட தொட மோகங்கள் தூண்டியதும்
சுட சுட தேன் வார்த்ததோ
மெதுவா மெதுவா அனுசரி
இதமா பதமா அனுபவி
எது என் விருப்பம் தொடு தொடு
இருக்கும் நாணம் விடு விடு
கன்னங்களை காட்டு கையெழுத்து போட்டிடவேண்டும் ஈர உதடுகளால்
பல்லு படும் லேசா கேலி பேச்சு கேட்டிட நேரும் ஊர் உறவுகளால்
பாட்டன் பூட்டன் செஞ்ச தவறு இது
யாரு நம்ம இங்க தடுக்கறது
ஓசை கேட்காமல் முத்தம் வைக்கவோ
இருந்தும் எதற்கு இடையில
இரு கை மேயும் இடையில
இடை தான் எனக்கோர் நூலகம்
வழங்கும் கவிதை வாசகம்
ஓ... பள்ளிக்கூட சிநேகம் பள்ளியறை பாய் வரை போகும் யோகம் நமக்கிருக்கு
கட்டுகளைப் போட்டு நட்டு வச்ச வேலி தாண்டி காதல் ஜெயிச்சிருக்கு
புள்ளி வைக்க இந்த பூமி உண்டு
கோலம் போட அந்த சாமி உண்டு
அங்கே நீ இன்றி நானும் இல்லையே
காத்தா இருக்க மூச்சில
மொழியா இருக்க பேச்சில
துணியா இருப்பேன் இடையில
துணையா இருப்பேன் நடையில
கடலோரம்
ஒரு ஊரு
ஒரு ஊரில்
ஒரு தோப்பு
ஒரு தோப்பில்
ஒரு பூவு
ஒரு பூவில்
ஒரு வண்டு
முதல் முதல் வண்டொன்று தீண்டியதும்
விரல் பட்ட பூ வியர்த்ததோ
தொட தொட மோகங்கள் தூண்டியதும்
சுட சுட தேன் வார்த்ததோ
மெதுவா மெதுவா அனுசரி
இதமா பதமா அனுபவி
எது என் விருப்பம் தொடு தொடு
இருக்கும் நாணம் விடு விடு




Attention! N'hésitez pas à laisser des commentaires.
//}