Dhilip Varman - Kangalil Oru Kathal текст песни

Текст песни Kangalil Oru Kathal - Dhilip Varman




கண்களில் ஒரு காதல் தேடல் வந்து
என்னிடம் உறங்காமலே தீண்டுதே
உனைக் காணும் நேரம் தனிமை ஏங்குதே
இமைக்காமலே
ஏதேதோ மாற்றம் என்னுள் கண்டு வந்தேன்
அன்பே உன் பேரைச் சொன்னாலே
காலங்கள் தாண்டிச் சென்ற போதும் பெண்ணே
வாடாமல் வாழும் எந்தன் காதல் உன்னுடன்
கண்களில் ஒரு காதல் தேடல் வந்து
உன்னிடம் உறங்காமலே தீண்டுதே
உனைக் காணும் நேரம் தனிமை ஏங்குதே
இமைக்காமலே
விடியும் வரையில் உன்னோடு
இரவாகித் தேய்வேன்
கனவில் வருடும் என் காதல்
பூவானதே
வந்தாய் சுகமாய் எனை ஆள
தேவதை போல
குளிரும் குளிரும் பனிபோல
உன் பார்வையில்
வாழ்வின் அர்த்தம் உன்னில் கண்டேன்
என் உயிரின் காதலே
உயிரின் ஓசை கேட்கச்செய்தாய் நீயடி
மறுபடியும் பிறந்தேன் உன்னால்
உனை என்றும் மறவேன்
போதும் போதும் இன்னும் என்ன காதல் ஏக்கமா?
கண்களில் ஒரு காதல் தேடல் வந்து
என்னிடம் உறங்காமலே தீண்டுதே
உனைக் காணும் நேரம் தனிமை ஏங்குதே
இமைக்காமலே
ஏதேதோ மாற்றம் என்னுள் கண்டு வந்தேன்
அன்பே உன் பேரைச் சொன்னாலே
காலங்கள் தாண்டிச் சென்ற போதும் பெண்ணே
வாடாமல் வாழும் எந்தன் காதல் உன்னுடன்
கண்களில் ஒரு காதல் தேடல் வந்து
என்னிடம் உறங்காமலே தீண்டுதே
உனைக் காணும் நேரம் தனிமை ஏங்குதே
இமைக்காமலே



Авторы: Dhilip Varman



Внимание! Не стесняйтесь оставлять отзывы.