A.R. Rahman, Unni Menon & Sujatha - Ithuthan Vaazhkai Embada текст песни

Текст песни Ithuthan Vaazhkai Embada - Sujatha , Unni Menon



நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் வாழ்க்கை என்பதா
விதியின் வேட்கை என்பதா
சதியின் சேர்கை என்பதா
சொல்மனமே
நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று உன் காதில் ஏதோ சொன்னது
இதுதான் வாழ்க்கை என்பதா
விதியின் வேட்கை என்பதா
சதியின் சேர்கை என்பதா
சொல்மனமே
கொடியின் பூக்கள் எல்லாம்
காம்பு தாங்கும் வரை
கூந்தல் பூக்கள் எல்லாம்
உறவு வாழும் வரை
காதல் நினைவொன்று தானே
காற்று தீரும் வரை
மழையின் பயணமெல்லாம்
மண்ணை தீண்டும் வரை
படகின் பயணமெல்லாம்
கரையை தாண்டும் வரை
மனிதா் பயணங்கள் எல்லாம்
வாழ்க்கை தீரும் வரை
நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று உன் காதில் ஏதோ சொன்னது
இதுதான் வாழ்க்கை என்பதா
விதியின் வேட்கை என்பதா
சதியின் சேர்கை என்பதா
சொல்மனமே
காற்று வழி போவதை நாற்று சொல்கின்றது
நேற்று மழை பெய்ததை ஈரம் சொல்கின்றது
கண்ணில் வழிகின்ற கண்ணீர்
காதல் சொல்கின்றது
இலைகள் விழுந்தாலுமே
கிளையில் துளிர் உள்ளது
இரவு தீர்ந்தாலுமே இன்னும் நிலவுள்ளது
பாதி உயிர் போன போதும் மீதி வாழ்வுள்ளது
நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று உன் காதில் ஏதோ சொன்னது
இதுதான் வாழ்க்கை என்பதா
விதியின் வேட்கை என்பதா
சதியின் சேர்கை என்பதா
சொல்மனமே




A.R. Rahman, Unni Menon & Sujatha - Pudhiya Mugam (Original Motion Picture Soundtrack)



Внимание! Не стесняйтесь оставлять отзывы.