A.R. Rahman feat. S. P. Balasubrahmanyam - Engae Pogudho Vaanam (From "Kochadaiiyaan") текст песни

Текст песни Engae Pogudho Vaanam (From "Kochadaiiyaan") - A. R. Rahman , S. P. Balasubrahmanyam



எங்கே போகுதோ வானம்
(ஹா-ஹா-ஹா-ஹோ-ஹோ-ஹோ)
எங்கே போகுதோ வானம்
அங்கே போகிறோம் நாமும்
(ஹா-ஹ-ஹ-ஹ-ஹ-ஹா-ஹா)
(ஹ-ஹ-ஹ-ஹ-ஹா-ஹா)
எங்கே போகுதோ வானம்
அங்கே போகிறோம் நாமும்
வாழ்வில் மீண்டாய், வையம் வென்றாய்
எல்லை உனக்கில்லை தலைவா
காற்றின் பாடல்கள் என்றுமே தீராது
வெற்றிச் சங்கொலி என்றுமே ஓயாது, ஓயாது
ஹே, உனது வாளால் ஒரு சூரியனை உண்டாக்கு
ஹோ, ஹோ, ஹே, எனது தோழா நம் தாய் நாட்டை பொன்னாக்கு
ஆகாயம் தடுத்தால், பாயும் பறவை ஆவோம்
மாமலைகள் தடுத்தால், தாவும் மேகம் ஆவோம்
காடு தடுத்தால், காற்றாய் போவோம்
கடலே தடுத்தால், மீன்கள் ஆவோம்
தீரா வைரம் உன் நெஞ்சம், நெஞ்சம், நெஞ்சம்
வெற்றி உனை வந்து கெஞ்சும், கெஞ்சும், கெஞ்சும்
லட்சியம் என்பதெல்லாம், வலி கண்டு பிறப்பதடா
வெற்றிகள் என்பதெல்லாம், வாள் கண்டு பிறப்பதடா
எங்கே போகுதோ வானம்
அங்கே போகிறோம் நாமும்
வாழ்வில் மீண்டாய், வையம் வென்றாய்
எல்லை உனக்கில்லை தலைவா
எந்தன் வில்லும், சொல்லிய சொல்லும்
எந்த நாளும் பொய்த்ததில்லை
இளைய சிங்கமே, எழுந்து போராடு, போராடு
தீரா வைரம் உன் நெஞ்சம், நெஞ்சம், நெஞ்சம்
வெற்றி உன்னை வந்து கெஞ்சும், கெஞ்சும், கெஞ்சும்
உங்களின் வாழ்த்துகளால், உயிர்க் கொண்டு எழுந்துவிட்டேன்
வாழ்த்திய மனங்களுக்கு என் வாழ்க்கையை வழங்கி விட்டேன்
ஹே, உனது வாளால் ஒரு சூரியனை உண்டாக்கு
ஹோ, ஹோ, ஹே, எனது தோழா நம் தாய் நாட்டை பொன்னாக்கு
எங்கே போகுதோ வானம்
அங்கே போகிறோம் நாமும்
வாழ்வில் மீண்டாய், வையம் வென்றாய்
எல்லை உனக்கில்லை தலைவா
காற்றின் பாடல்கள் என்றுமே தீராது
வெற்றிச் சங்கொலி என்றுமே ஓயாது, ஓயாது




A.R. Rahman feat. S. P. Balasubrahmanyam - My Hits: SPB
Альбом My Hits: SPB
дата релиза
07-03-2014



Внимание! Не стесняйтесь оставлять отзывы.