S. P. Balasubrahmanyam & Harris Jayaraj - Yamma Yamma (From "7 Aum Arivu") текст песни

Текст песни Yamma Yamma (From "7 Aum Arivu") - S. P. Balasubrahmanyam & Harris Jayaraj




யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆணோட காதல் கை ரேகை போல
பெண்ணோட காதல் கை குட்டை போல
கனவுக்குள்ள அவளை வச்சேனே
என் கண்ண ரெண்டை திருடி போனாளே
புல்லாங்குழல கையில் தந்தாளே
என் முச்சுக்காத்தை வாங்கி போனாளே
பொம்பளைய நம்பி கெட்டு போனவங்கு ரொம்ப
அந்த வரிசையில் நானும் இப்ப கடைசியில் நின்னேன்
முத்தெடுக்க போனா உன் மூச்சடங்கும் தன்னா
காதல் முத்தெடுத்த பின்னால்
மனம் பித்தமாகும் பெண்ணால்
அவ கைய விட்டு தான் போயாச்சு
கண்ணும் ரெண்டுமே பொய்யாச்சு
காதல் என்பது வீண் பேச்சு
மனம் உன்னாலே புண்ணா போச்சு
காதல் பாதை கல்லு முல்லுடா
அத கடந்து போன ஆளே இல்லடா
காதல் ஒரு போத மாத்திரை
அத போட்டுக்கிட்டா மூங்கில் யாத்திரை
யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டம் பூச்சி சாயம் போச்சம்மா
ஓட்ட போட்ட முங்கில்
அது பாட்டு பாட கூடும்
நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும்
மனம் உன்னை பத்தி பாடும்
வந்து போனது யாரு
ஒரு நந்தவன தேரு
நம்பி நொந்து போனேன் பாரு
அவ பூவு இல்ல நாரு
என்னை திட்டம் போட்டு நீ திருடாதே
எட்ட நின்னு நீ வருடாதே
கட்டெறும்ப போல நெருடாதே
மனம் தாங்கதே தாங்கதே
வானாவில்லின் கோலம் நீயம்மா
என் வானம் தாண்டி போனதெங்கம்மா
காதல் இல்லா ஊரு எங்கடா
என்ன கண்ண கட்டி கூட்டி போங்கடா
யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆண் ஓட காதல் கை ரேகை போல
பெண்ணோட காதல் கை குட்டை போல
கனவுக்குள்ள அவளை வச்சனே
என் கண்ண ரெண்ட திருடி போனாளே
புல்லங்குழல கையில் தந்தாளே
என் முச்சு காத்த வாங்கி போனாளே



Авторы: J HARRIS JAYARAJ, KABILAN



Внимание! Не стесняйтесь оставлять отзывы.