Anirudh Ravichander feat. Jonita Gandhi - Orey Oru текст песни

Текст песни Orey Oru - Anirudh Ravichander , Jonita Gandhi



ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு
ஒரு அடி கூட தாங்காதே
ஓர் இரவில் ஒரு இடி வீட்டில் இறங்கியதே
ஒரே நொடியில் வீடும் கருகியதே அந்நாளில்
ஒரே ஒரு ஓடைமேலே
ஒரு ஓடம் மிதந்திருக்க
ஒரே ஒரு வெள்ளம் வந்து அடித்து போனதே
ஒரே ஒரு கூட்டினுள்ளே
ஒரு கூட்டம் ஒளிந்திருக்க
ஒரு கிளை முறிந்ததாலே கதை முடிந்ததே
மூடியதெல்லாம் இனி மீண்டும் என்று திறக்குமோ
வேண்டியதெல்லாம் இனி எப்போது நடக்குமோ
என் ஆசை ஒன்றே
என் கனவும் ஒன்றே ஒன்றுதான்
ஒரு நாள் அழகாய் வாழ்ந்தால் போதுமே போதும்
சத்தமாய் நான் அழுதிடதான் இங்கு
அத்தனையும் யுத்தமாக மாறுதோ
மொத்தமாய் நான் முடிந்திட தான்
இன்று என்னை மீறி என்னனவோ ஆகுதோ
பாவமாய் நான் புதைந்திட தான்
ஒரு சுழல் என்னை சுத்தி சுத்தி சீண்டுதோ
கோவமாய் நான் கிடந்திடதான்
பல புதிர்களும் என்னை தேடுதோ
ஒரு பனி மூட்டம்
இன்று புகை என தோன்றியதே
ஒரு முயல் கூட்டம்
புயல் நடுவில் திணறுதே
வாடியதெல்லாம் இனி மீண்டும் என்று மலருமோ
தேடியதெல்லாம் இனி எப்போது கிடைக்குமோ
என்னாசை ஒன்றே
என் கனவும் ஒன்றே ஒன்றுதான்
ஒரு நாள் அழகாய் வாழ்ந்தால் போதுமே
மூடியதெல்லாம் இனி மீண்டும் என்று திறக்குமோ
வேண்டியதெல்லாம் இனி எப்போது நடக்குமோ
என் ஆசை ஒன்றே
என் கனவும் ஒன்றே ஒன்றுதான்
ஒரு நாள் அழகாய் வாழ்ந்தால் போதுமே போதும்



Авторы: Anirudh Ravichander, Vignesh Shivn


Anirudh Ravichander feat. Jonita Gandhi - Kolamaavu Kokila (Coco) [Original Motion Picture Soundtrack]
Альбом Kolamaavu Kokila (Coco) [Original Motion Picture Soundtrack]
дата релиза
05-07-2018



Внимание! Не стесняйтесь оставлять отзывы.