K. S. Chithra - Un Marbile Vizhi Moodi (From "Ninaithen Vanthai") текст песни

Текст песни Un Marbile Vizhi Moodi (From "Ninaithen Vanthai") - Chitra

ஆசை நாயகனே சௌக்கியமா
உந்தன் நலம் நாடும் பிரியமானவளின் கடிதம்
உன் மார்பில் விழி மூடித் தூங்குகிறேன் தினமும் கனவில்
உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுதில்
எந்தன் வளையல் குலுங்கியது கொலுசும் நழுவியது
வெக்கத்தில் கன்னங்கள் கூசியது
மனம் காலடி ஓசையை எதிர்பார்த்து துடிக்கின்றது... அன்பே
உன் மார்பில் விழி மூடித் தூங்குகிறேன் தினமும் கனவில்
சின்னக் குயில்கள் உனை உனை நலம் கேட்குதா
நெஞ்சில் பரவும் அலை அலை உனை ஈரம் ஆக்குதா
மெல்ல நகரும் பகல் பகல் யுகம் ஆகுதா
மூச்சே விட்டதால் தலையணை அது தீயில் வேகுதா
நெஞ்சம் எதிலும் ஒட்டாமல்
கண்ணில் கனவும் வற்றாமல்
தினமும் தினமும் உருகும் மனது
ஏன் இந்த நிலைமை தெரியவில்லை
இந்தப் பரவசம் உனக்குள்ளும் இருக்கிறதா... அன்பே
உன் மார்பில் விழி மூடித் தூங்குகிறேன் தினமும் கனவில்
உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுதில்
காலை வெயில் நீ பனித்துளி இவள் அல்லவா
என்னைக் குடித்து இனி இனி உன் தாகம் தீர்க்கவா
துள்ளும் நதி நீ இவள் அதில் நுரையல்லவா
இருவருக்கும் இடைவெளி இனி இல்லை அல்லவா
நிலவில் வேகும் முன்னாலே
வருவாய் எந்தன் முன்னாலே
அழகும் உயிரும் உனக்கே சொந்தம்
ஏராளம் ஆசை நெஞ்சில் உண்டு
அதை எழுதிட நாணங்கள் தடுக்கிறதே... அன்பே
உன் மார்பில் விழி மூடித் தூங்குகிறேன் தினமும் கனவில்
உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன் விடியும் பொழுதில்
நீ கா நீ ஸா ஸா
நீ நீ ரி கா
நீ கா நீ ஸா ஸா
நீ நீ ரி கா

Авторы: Palani Bharathi

K. S. Chithra - Hits of Chitra
Альбом Hits of Chitra
дата релиза
31-05-2002

Внимание! Не стесняйтесь оставлять отзывы.