Harris Jayaraj, Karthik & Megha - Mun Andhi (From "7 Aum Arivu") текст песни

Текст песни Mun Andhi (From "7 Aum Arivu") - Karthik , MEGHA , Harris Jayaraj



முன் அந்திச் சாரல் நீ
முன் ஜென்மத் தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில்
தொலைதூரத்தில் வரும் பாடல் நீ
பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில்
விழி ஓரத்தில்
வரும் கனவு நீ.
ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
தன்னால் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே.
வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் இன்பம் சொல்ல
வார்த்தைகள் கொஞ்சமே.
முன் அந்திச் சாரல் நீ
முன் ஜென்மத் தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில்
தொலைதூரத்தில் வரும் பாடல் நீ
பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில்
விழி ஓரத்தில்
வரும் கனவு நீ.
ஓ... அழகே ஓ... இமை அழகே
ஹே... கலைந்தாலும் உந்தன் கூந்தல் ஓரழகே...
விழுந்தாலும் உந்தன் நிழலும் பேரழகே
அடி உன்னைத் தீண்டத்தானே
மேகம் தாகம் கொண்டு
மழையாய் தூவாதோ
வந்து உன்னைத் தொட்ட பின்னே
தாகம் தீர்ந்ததென்று
கடலில் சேராதோ ஒ.ஒ.
ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
தன்னால் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே.
வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் இன்பம் சொல்ல
வார்த்தைகள் கொஞ்சமே
அதிகாலை ஒ. அந்தி மாலை.
உனைத் தேடி பார்க்கச் சொல்லிப் போராடும்
உனைக் கண்ட பின்பே எந்தன் நாள் ஓடும்
பெண்ணே பம்பரத்தைப் போலே, என்னைச் சுற்ற வைத்தாய்
எங்கும் நில்லாமல்.
தினம் அந்தரத்தின் மேலே, என்னைத் தொங்க வைத்தாய்
காதல் சொல்லாமல்
ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
தன்னால் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே.
வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் இன்பம் சொல்ல
வார்த்தைகள் கொஞ்சமே
முன் அந்திச் சாரல் நீ
முன் ஜென்மத் தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில்
தொலைதூரத்தில் வரும் பாடல் நீ
பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில்
விழி ஓரத்தில்
வரும் கனவு நீ.



Авторы: J Harris Jayaraj, N Muthu Kumaran



Внимание! Не стесняйтесь оставлять отзывы.