Ilaiyaraaja - Yenge Jen Jeevane текст песни

Текст песни Yenge Jen Jeevane - Ilaiyaraaja




எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
தேரில் வந்த தெய்வமே
தேவ பந்தமே
எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
கையில் தீபம் இருந்தும் நான் கண்ணில்லாமல் வாழ்ந்தேன்
கண்ணை தந்து உன்னை நான் அன்னை போல காப்பேன்
வாழ்க்கை என்னும் பள்ளியில் என்னை சேர்க்க வா
வாழ்க்கை என்னும் பள்ளியில் என்னை சேர்க்க வா
விழிகள் ரெண்டும் பள்ளிக்கூடம்
தொடங்கு கண்ணா புதிய பாடம்
மடியில் சாய்ந்து படிக்க வேண்டும்
எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
தேரில் வந்த தெய்வமே
தேவ பந்தமே
எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
முத்தம் போடும் வேளையில் சத்தம் ரொம்ப தொல்லை
பூக்கள் பூக்கும் ஓசைகள் காதில் கேட்பதில்லை
காம பானம் பாய்வதால் காயமாகுமே
காம பானம் பாய்வதால் காயமாகுமே
கலசம் இன்று கவசமாகும் காமன் அம்பு முறிந்துபோகும்
மலர்ந்த தேகம் சிவந்து போகும்
எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
தேரில் வந்த தெய்வமே
தேவ பந்தமே
எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே



Авторы: Ilaiyaraaja, Vaali Vaali


Внимание! Не стесняйтесь оставлять отзывы.
//}