K. J. Yesudas - Aarariraro текст песни

Текст песни Aarariraro - K. J. Yesudas




ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து
ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து
வாழும் காலம் யாவுமே.
தாயின் பாதம் சொர்க்கமே
வேதம் நான்கு சொன்னது...
அதை நான் அறிவேனே!!
அம்மா என்னும் மந்திரமே .
அகிலம் யாவும் ஆள்கிறதே
ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து
வேர் இல்லாத மரம்போல்
என்னை நீ பூமியில் நட்டாய்.
ஊரு கண் என் மேல் பட்டால்
உன் உயிர் நோக துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
. நீ சொல்லி தந்தாயே
பிறப்புக்கும் இறப்பபுக்கும் இடையில்
வழி நடத்தி சென்றாயே
உனக்கே ஓர் தொட்டில் கட்டி .
நானே... தாயாய் மாறிட வேண்டும்
ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து
தாய் சொல்கின்ற வார்தைகள் எல்லாம்
. நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேல் ஆசை துறந்த
கண் தூங்காத உயிர் அல்லவா
காலத்தின் கணக்குகளில் செலவாகும்
வரவும் நீ...
சுழலுகின்ற பூமியில் மேலே சுழறாத
பூமி நீ...
இறைவா நீ ஆணையிடு
தாயே நீ எந்தன் மகளாய் மாற...
ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து




Внимание! Не стесняйтесь оставлять отзывы.