R. V. Udayappa Thevar - Azhakukku текст песни

Текст песни Azhakukku - R. V. Udayappa Thevar




அழகுக்குப் பொருள் கூறும் கலைத்தெய்வமே
இந்தக் கலையாவும் நீதந்த அருள் செல்வமே
அழகுக்குப் பொருள் கூறும் கலைத்தெய்வமே
சிந்தையில் நீ இருந்தால் துணிவு உண்டாகும்
உன் சிரித்த முகம் கண்டால் கவலைகள் தீரும்
என் இருகை உன் நடிகள் வணங்கிடும்போது
உன் பன்னிருகை முன்னிருந்து பாதுகாக்குமே
அழகுக்குப் பொருள் கூறும் கலைத்தெய்வமே
இந்தக் கலையாவும் நீதந்த அருள் செல்வமே
அழகுக்குப் பொருள் கூறும் கலைத்தெய்வமே
எது பாதை என்று நான் அறியாதபோது
இது பாதை என்று நீ நடை போட வைத்தாய்
தன்மானம் மெய்ஞானம் நீ தந்த தானம்
என் தமிழ்ஞானம் போற்றுவது உன் சந்நிதானம்
அழகுக்குப் பொருள் கூறும் கலைத்தெய்வமே
அறிவோடு மாதீரம் வேல் கொடுத்தது
உன் அழகான மயிலாட ஆடல் வந்தது
சந்தனடை பிறுப்புகளும் சொந்தமானது
கந்தணனும் மந்திரம் என் கவசமானது
அழகுக்குப் பொருள் கூறும் கலைத்தெய்வமே
இந்தக் கலையாவும் நீதந்த அருள் செல்வமே
அழகுக்குப் பொருள் கூறும் கலைத்தெய்வமே



Авторы: Poovai Senguttuvan, K V Mahadevan



Внимание! Не стесняйтесь оставлять отзывы.