Roshan Sebastian feat. Kevin Jason - Poovukkul Olindhirukkum - Jeans текст песни

Текст песни Poovukkul Olindhirukkum - Jeans - Roshan Sebastian feat. Kevin Jason



ஒரு வாசமில்லா கிளையின் மேல்
நறுவாசமுள்ள பூவை பார்
பூவாசம் அதிசயமே
அலைகடல் தந்த மேகத்தில்
சிறு துளி கூட உப்பில்லை
மழை நீரும் அதிசயமே
மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம் போல்
மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே
உடலுக்குள் எங்கே உயிருள்ள தென்பதும்
உயிருக்குள் காதல் எங்குள்ள தென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயமே
கல் தோன்றி மண் தோன்றி கடல் தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்-ஹோ-ஹோ
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனி கூட்டம் அதிசயம்
வண்ணத்து பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துளை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம்
கல் தோன்றி மண் தோன்றி கடல் தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்-ஹோ-ஓ
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்




Roshan Sebastian feat. Kevin Jason - Poovukkul Olindhirukkum - Jeans
Альбом Poovukkul Olindhirukkum - Jeans
дата релиза
02-11-2020



Внимание! Не стесняйтесь оставлять отзывы.