T. M. Soundararajan - Nenjam Undu (From "En Annan") текст песни

Текст песни Nenjam Undu (From "En Annan") - T. M. Soundararajan




ஆ: நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா,
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா,
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா... ஹே
நெஞ்சம் உண்டு நேரமை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா...
ஆ: அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு
தினம் அச்சப்பட்டு கோழைக்கு இல்லம் எதற்கு,
அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு
தினம் அச்சப்பட்டு கோழைக்கு இல்லம் எதற்கு,
கொடுமையை கண்டு கண்டு பயம் எதற்கு
கொடுமையை கண்டு கண்டு பயம் எதற்கு
நீ கொண்டு வந்ததென்னடா மீசை முறுக்கு ... ஹேய்
ஆ: நெஞ்சம் உண்டு நேரமை உண்டு ஓடு ராஜா
நீ நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா...
ஆ: அன்னாந்து பார்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடுசை கட்டி,
அன்னாந்து பார்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடுசை கட்டி,
பொன்னான உலகென்று பெயருமிட்டால்
பொன்னான உலகென்று பெயருமிட்டால்
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும் ஹேய்...
ஆ: நெஞ்சம் உண்டு நேரமை உண்டு ஓடு ராஜா
நீ நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா...
ஆ: உண்டு உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னை விட்டால் பூமி ஏது கவலை விடு,
உண்டு உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னை விட்டால் பூமிஏது கவலை விடு,
ரெண்டில் ஒன்று பார்பதற்கு தோளை நிமிர்த்து
ரெண்டில் ஒன்று பார்பதற்கு தோளை நிமிர்த்து
அதில் நீதி வரவில்லை எனில் வாளை நிமிர்த்து... ஹேய்.
ஆ: நெஞ்சம் உண்டு நேரமை உண்டு ஓடு ராஜா
நீ நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா... ஹே
நெஞ்சம் உண்டு நேரமை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா...



Авторы: K.V.MAHADEVAN, K V MAHADEVAN, KANNADHASAN


Внимание! Не стесняйтесь оставлять отзывы.