Unnikrishnan & Sujatha - Adhikaalaiyil sevalai текст песни

Текст песни Adhikaalaiyil sevalai - Sujatha , Unnikrashan




அதிகாலையில் சேவலை எழுப்பி
அதைக் கூவென்று சொல்லுகிறேன்
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி
அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்
அதிகாலையில் சேவலை எழுப்பி
அதைக் கூவென்று சொல்லுகிறேன்
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி
அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்
இன்னும் வாசலில் கோலத்தை காணவில்லை
உன் வளையொலி கொலுசுகள் கேட்கவில்லை
ஏன் தாமரை பூக்கவில்லை
அதிகாலையில் ...
மின்னல்கள் ரெண்டு மோதக் கண்டேன்
விண்மீன்கள் பூக்கள் தூவக் கண்டேன்
ஆழ்வார்கள் போற்றிப் பாடக் கண்டேன்
ஸ்ரீரங்கன் மார்பில் சேரக் கண்டேன்
சரணம் 1
காலைப் பொழுதில் காதல் கூடாது
கூடாது
காதல் பொழுதில் வேலைக் கூடாது
கூடாது கூடாது
ஆசையில் நெஞ்சம் எங்கக் கூடாது
கூடாது
அன்பின் எல்லைத் தாண்டக் கூடாது
கூடாது கூடாது
கோவை கனி இதழ் மூடக் கூடாது
கொத்தும் கிளியைத் திட்டக் கூடாது
அன்பே என்னைக் கனவில் கூட மறக்கக் கூடாது
உறங்கும் போதும் உயிரே உன்னைப் பிரியக் கூடாது
அதிகாலையில்...
சரணம் 2
மாலைத் தென்றல் வீசக் கூடாது
கூடாது
மாநிலச் செய்திகள் கேட்க கூடாது
கூடாது கூடாது
சூரியன் மேற்கை பார்க்க கூடாது
கூடாது
சூரிய காந்தியை பார்க்க கூடாது
கூடாது கூடாது
ஆலய சங்கொலி ஊதக் கூடாது
அஞ்சு மணிக்கு பூக்க கூடாது
மாலை என்ற சொல்லை யாரும் நினைக்க கூடாது
இரவு என்ற சொல்லே தமிழில் இருக்கக் கூடாது
அதிகாலையில் ...






Внимание! Не стесняйтесь оставлять отзывы.