Hariharan feat. Chitra - Udaiyadha Vennila Songtexte

Songtexte Udaiyadha Vennila - Hariharan , K. S. Chithra




உடையாத வெண்ணிலா
உறங்காத பூங்குயில்
நனைகின்ற புல்வெளி
நனையாத பூவனம்
உதிர்கின்ற ஒரு முடி
களைகின்ற சிறு நகம்
ஸ்ருங்கார சீண்டல்கள்
சில்லென்ற ஊடல்கள்
ப்ரியம் ப்ரியம் (ஆ-அ-அ)
ப்ரியம் ப்ரியம் (ஆ-ஆ-ஆ)
ப்ரியம் ப்ரியம் (ஆ-அ-அ)
ப்ரியம் ப்ரியம்
உடையாத வெண்ணிலா
உறங்காத பூங்குயில்
நனைகின்ற புல்வெளி
நனையாத பூவனம்
ம்-ம்-ம்
அந்தி மஞ்சள் மாலை
ஆளில்லாத சாலை
தலைக்கு மேலே போகும்
சாயங்கால மேகம்
முத்தம் வைத்த பின்னும்
காய்ந்திடாத ஈரம்
எச்சில் வைத்த பின்னும்
மிச்சம் உள்ள பானம்
கன்னம் என்னும் பூவில்
கைகள் செய்த காயம்
ப்ரியம் ப்ரியம்
ப்ரியம் ப்ரியம்
ப்ரியம் ப்ரியம் (ப்ரியம் ப்ரியம்)
ப்ரியம் ப்ரியம்
உடையாத வெண்ணிலா
உறங்காத பூங்குயில்
நனைகின்ற புல்வெளி
நனையாத பூவனம்
கண்கள் செய்யும் ஜாடை
கழுத்தில் பூத்த வேர்வை
அள்ளிச் செல்லும் கூந்தல்
ஆடை தூக்கும் காற்று
மொட்டு விட்ட பாகம்
தொட்டு பார்த்த ஸ்நேகம்
முகத்தின் மீது ஆடை
மோதிச் சென்ற மோகம்
இரண்டு பேரை ஒன்றாய்
எழுதிப் பார்க்கும் இன்பம்
ப்ரியம் ப்ரியம்
ப்ரியம் ப்ரியம்
ப்ரியம் ப்ரியம்
ப்ரியம் ப்ரியம் (ப்ரியம் ப்ரியம்)
உடையாத வெண்ணிலா
உறங்காத பூங்குயில்
நனைகின்ற புல்வெளி
நனையாத பூவனம்
உதிர்கின்ற ஒரு முடி
களைகின்ற சிறு நகம்
ஸ்ருங்கார சீண்டல்கள்
சில்லென்ற ஊடல்கள்
ப்ரியம் ப்ரியம்
ப்ரியம் ப்ரியம் (ஆ-ஆ-ஆ)
ப்ரியம் ப்ரியம்
ப்ரியம் ப்ரியம்



Autor(en): Vairamuthu, Vidya Sagar



Attention! Feel free to leave feedback.