Karthik & Harris Jayaraj - Kani Mozhiyae (From "Irandaam Ulagam") Songtexte

Songtexte Kani Mozhiyae (From "Irandaam Ulagam") - Karthik & Harris Jayaraj




கனிமொழியே என்னைக் கொன்று போகிறாய்
கடை விழியால் என்னைத் தின்று போகிறாய்
கனிமொழியே என்னைக் கொன்று போகிறாய்
கடை விழியால் என்னைத் தின்று போகிறாய்
இதயம் உடைத்து என்னை வாழச் சொல்கிறாய்
இமைகள் பரித்து என்னைத் தூங்க சொல்கிறாய்
ஒரு பாதிக் கண்ணில் காதல் செய்கிறாய்
மறு பாதிக் கண்ணில் ஊடல் செய்கிறாய்
நான் எட்டு திக்கும் அலைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டிலே
நான் பட்டாம்பூச்சி ஆவதா
நான் எட்டு திக்கும் அலைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டிலே
நான் பட்டாம்பூச்சி ஆவதா
உந்தன் கன்னத்தோடு எந்தன் கன்னம் வைத்தால்
நானும் மண்ணில் கொஞ்சம் வாழ்ந்திருப்பேன்
அடி உந்தன் கன்னக் குழியில்
என்னைப் புதைத்து வைத்தால்
மண்ணில் மாண்ட பின்னும் வாழ்ந்திருப்பேன்
ஒரு கள்ளப் பார்வை பார் அழகே
சிரு காதல் பேசு ஊமைக் கிளியே
நான் தேடித் திரியும் வாழ்வே நீ தானே
தென்றலே வா முன்னே முத்தமா கேட்கிறேன்
முருவல் தான் கேட்கிறேன்
கனிமொழியே கடைவிழியால்
பறவை பறக்கும் போது ஆகாயம் தொலைந்து போகும்
பார்வை பறவை மீதே பதிந்திருக்கும்
விழி உன்னைக் காணும் போது உலகம் தொலைந்து போகும்
என் கண்கள் உந்தன் மீதே விழுந்திருக்கும்
என்னைக் கட்டி போடும் காந்தச் சிமிழே
ஒரு பாட்டு பாடு காட்டுக் குயிலே
என் காலை கனவின் ஈரம் நீதானா
வாழலாம் வா பெண்ணே வலது கால் எட்டு வை
வாழ்க்கையைத் தொட்டு வை
கனிமொழியே என்னைக் கொன்று போகிறாய்
கடை விழியால் என்னைத் தின்று போகிறாய்
இதயம் உடைத்து என்னை வாழச் சொல்கிறாய்
இமைகள் பரித்து என்னைத் தூங்க சொல்கிறாய்
ஒரு பாதிக் கண்ணில் காதல் செய்கிறாய்
மறு பாதிக் கண்ணில் ஊடல் செய்கிறாய்
நான் எட்டு திக்கும் அலைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டிலே
நான் பட்டாம்பூச்சி ஆவதா
நான் எட்டு திக்கும் அலைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டிலே
நான் பட்டாம்பூச்சி ஆவதா



Autor(en): JAYARAJ J HARRISH, VAIRAMUTHU



Attention! Feel free to leave feedback.