V. Selvaganesh feat. Karthik & Chinmayi - Lesa Parakkudhu (From "Vennila Kabadi Kuzhu") Songtexte

Songtexte Lesa Parakkudhu (From "Vennila Kabadi Kuzhu") - Karthik , Chinmayi Sripada , V. Selvaganesh , Kishore




காதல் பிறக்கின்ற பருவம் பருவம்
மௌனம் புரிகின்ற தருணம் தருணம்
கண்கள் கலக்கின்ற நிமிடம் நிமிடம்
கால்கள் தொடர்கின்ற நடனம் நடனம்
லேசா பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல
லேசா நழுவுது கொலுசு கொலுசு
எங்கே விழுந்தது தெரியல
சுண்டெலி வலையில நெல்ல போல்
உந்தன் நெனப்ப எனக்குள்ள சேக்குற
அல்லிப்பூ குளத்துல கல்ல போல் உந்தன்
கண் விழி தாக்கிட சுத்தி சுத்தி நின்ன
கருச்சா குருவிக்கும் மயக்கம் மயக்கம்
கனவுல தினமும் மிதக்கும் மிதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்
சிறகால் வானத்தை இடிக்கும் இடிக்கும்
லேசா பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல
லேசா நழுவுது கொலுசு கொலுசு
எங்கே விழுந்தது தெரியல
தத்தி தத்தி போகும் பச்ச புள்ள போல
பொத்தி வெச்சுத்தானே மனசு இருந்ததே
திருவிழா கூட்டத்தில் தொலையுறேன் சுகமா
தொண்ட குழி தாண்டி வார்த்தை வரவில்ல
என்னென்னவோ பேச உதடு நெனச்சது
பார்வைய பார்த்ததும் எதமா பதறுது
ராத்திரி பகலாதான்
நெஞ்சுல ராட்டினம் சுத்துதடி
பூட்டுன வீட்டுல தான்
புதுசா பட்டாம் பூச்சி பறக்குதடா
கருச்சா குருவிக்கும் மயக்கம் மயக்கம்
கனவுல தினமும் மிதக்கும் மிதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்
சிறகால் வானத்தை இடிக்கும் இடிக்கும்
லேசா பறக்குது மனசு மனசு
ஏதோ நடக்குது வயசுல
பூவா விரியுற உலகம் உலகம்
தரிசா கிடந்தது இது வரை
ஒத்த மரம் போலே செத்து கெடந்தேனே
உன்ன பார்த்த பின்னே உசுரு பொழச்சது
சொந்தமா கிடைப்பியா சாமிய கேப்பேன்
ரெட்டை ஜட போட்டு துள்ளி திரிஞ்சேனே
உன்ன பார்த்த பின்னே வெட்கம் புரிஞ்சதே
உனக்கு தான் உனக்கு தான்
பூமியில் பிறந்தேன்
காவடி சுமப்பது போல் மனசு
காதலை சுமக்குதடா
கனவுல நீ வருவ அதனால் கண்ணு தூங்குதடி
கருச்சா குருவிக்கும் மயக்கம் மயக்கம்
கனவுல தினமும் மிதக்கும் மிதக்கும்
காதல் வந்ததும் குதிக்கும் குதிக்கும்
சிறகால் வானத்தை இடிக்கும் இடிக்கும்



Autor(en): N MUTHU KUMAR, V. SELVAGANESH



Attention! Feel free to leave feedback.
//}